Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணத்துக்கு பெற்றோருடன் சென்ற 6 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. லாரி டிரைவர் கைது

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குரபல கோட்டா அருகே பெற்றோருடன் திருமணத்திற்கு சென்ற ஆறு வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் லாரி டிரைவர் முகமது ரபி கைது செய்யப்பட்டார்.

சித்தூர் மாவட்டத்தில் தம்புள்ள பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி சித்தா ரெட்டி. அவருடைய மனைவி உஷாராணி.
இவர்கள் குரபலகோட்டா அருகே உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 8 ம் தேதி அதிகாலை நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தங்களுடைய ஆறு வயது மகள் வர்ஷிதாவுடன் சென்றிருந்தனர்.

அன்று இரவு திருமண வரவேற்பு முடிந்து பின்னர் இரவு 12 மணி அளவில் குழந்தை வர்ஷிதாவை காணவில்லை.

பல இடங்களில் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை.
இதனால் காவல் நிலையத்தில் வர்ஷிதாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.

காணவில்லை

காணவில்லை

இரவு முதல் வர்ஷிதாவை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அன்று காலை திருமண மண்டபம் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வர்ஷிதா உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீசார் வர்ஷிதா உடலை பார்வையிட்டு குழந்தை இறந்தது எப்படி என்று ஆய்வு செய்தனர்.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

அப்போது வர்ஷினி உடலில் ஆங்காங்கே ரத்தக்கறை படிந்து இருப்பது தெரியவந்தது.

சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வர்ஷிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

வர்ஷிதா

வர்ஷிதா

இந்த நிலையில் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் அன்று இரவு வர்ஷிதா சென்றது தொடர்பான காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

சிறுமி பலாத்காரம்

சிறுமி பலாத்காரம்

எனவே அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்த 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதும், சிறுமியின் உடலில் ஆங்காங்கே இரத்தக் கறைகள் படிந்து இருப்பதும் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணை

விசாரணை

இந்த நிலையில் வழக்கு பதிவு செய்து சிறப்பு குழுக்களை அமைத்து மதனபள்ளி போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். குற்றவாளியை பிடிக்க போலீசார் அவருடைய படத்தையும் வெளியிட்டனர்.

தம்பலப்பள்ளி அருகே உள்ள பசினிகொண்டாவை சேர்ந்த லாரி டிரைவர் முகமது ரபி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

லாரி டிரைவர் கைது

லாரி டிரைவர் கைது

விசாரணையில் குழந்தை வர்ஷிதாவை தான் பலாத்காரம் செய்து கொலை செய்ததை முகமது ரபி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரு்ம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+