திருமலை திருப்பதியில் திகைத்த பக்தர்கள்.. தேவஸ்தானம் புது சர்ப்ரைஸ்.. அதைவிடுங்க, இதென்ன புது ரூல்ஸ்

Subscribe to Oneindia Tamil

திருமலை: தினம் தினம் புதுபுது அறிவிப்புகள், விதிமுறைகள், அறிவுறுத்தல்களை, பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது திருப்பதி தேவஸ்தானம். அந்தவகையில், இன்றைய தினம் ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது தேவஸ்தானம்.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வாடிக்கையாகும். இதற்காக பலரும் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்துவிடுவார்கள்.

tirumala tirupati devasthanam tirumala temple

தற்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் பல்வேறு உற்சவங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் 4ம் கட்ட அதர்வண வேதபாராயணம் ஆரம்பமாகியிருக்கிறது. இதையடுத்து, 11ம் தேதி சர்வ ஏகாதசி, 12ம் தேதி சக்கரதீர்த்த முக்கோட்டி, 13ம் தேதி திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை, 14ம் தேதி திருப்பாணாழ்வார் வருட திருநட்சத்திரம் நடைபெறுகிறது.

15ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்படும்... மறுநாள் 16ம் தேதி மார்கழி மாதம் ஆரம்ப சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு திருப்பாவை நடைபெறும். 26ம் தேதி சர்வ ஏகாதசி, 29ம் தேதி மாத சிவராத்திரி, தொண்டரடிப்பொடியாழ்வார் வருட திருநட்சத்திரம், 30ம் தேதி அத்யாயின உற்சவம் தொடங்கி நடைபெற உள்ளது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை: இந்நிலையில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள், மீடியாவுக்கு பேட்டி அளிக்கும்போது அரசியல் பேசக்கூடாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லட்சக்கணக்கான பொதுமக்களுடன், அரசியல்வாதிகளும், நடிகர்களும், திருப்பதி கோயிலுக்கு சென்று வருகிறார்கள்.. அப்போது கோவில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, அரசியல் பேசுவதால் சில சமயங்களில் அது சர்ச்சையில் போய் முடிந்துவிடுகிறது.

புதிய தடை: எனவே, கோவில் வளாகத்தில் பேட்டி அளிக்கும் அரசியல்வாதிகள், நடிகர்கள் அரசியல், மத வெறுப்பு கருத்துக்களை கூற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்மீக தலத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இனி பேட்டிகளை தந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.

இப்படியொரு நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்தாலும், பலரும் அதை பின்பற்றுவதில்லையாம். அதனால்தான், மறுபடியும் அது தொடர்பான கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்.

புயல், மழை: இந்த தகவல் கசிந்து வரும்நிலையில், மற்றொரு மகிழ்ச்சி தகவல் தேவஸ்தானத்திலிருந்து வெளியாகியிருக்கிறது. அதாவது, புயல் காரணமாக ஆந்திராவில் கடந்த 3 நாட்களாகவே மழை கொட்டி வருகிறது. திருப்பதி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதுடன், கடும் குளிர் காற்றும் வீசுகிறது. அதேபோல, திருப்பதி மலையில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகிறது... மலைப் பாதையிலும் தண்ணீர் வழிந்தோடுகிறது.இதனால், பக்தர்கள் மழையில் நனைந்தபடியே, குளிரில் சாமி தரிசனம் செய்தனர்..

மகிழ்ச்சி: எனினும், தொடர் மழையின் காரணமாக பக்தர்களின் கூட்டம் குறைந்துவிட்டதாக தெரிகிறது. எனவே, நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாகவே இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் வெறும் 1 மணி நேரத்திலேயே ஏழுமலையானை தரிசித்துள்ளனர்.. மழை நேரத்தில், இவ்வளவு விரைவாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதை பக்தர்களே எதிர்பார்க்கவேயில்லையாம். இதனால் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+