நிஜமான விவேக் காமெடி..தமிழ்நாட்டில் கந்தலானது பத்தாதுனு ஆந்திராவில் கண்டமாகப் போகும் டிடிஎஃப் வாசன்?
திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை கோயிலில் சில நாட்களுக்கு முன்னர் தரிசனம் செய்த டிடிஎஃப் வாசன், பக்தர்களை பிராங் செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் உடனடியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆந்திர போலீசார் கூறியுள்ளனர். இதனால் படிக்காதவன் விவேக் காமெடியை வைத்து வாசனை கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்..!
கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் தான் பயணம் செய்யும் வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றியதை அடுத்து அவருக்கு பல சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

மேலும் அவரை பைக் ரைடர்களும் ஹீரோ போல கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக 2கே கிட்ஸ்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது பிறந்த நாளுக்கு வைத்த ரசிகர்கள் சந்திப்பில் கட்டுக்கடங்காமல் வந்த கூட்டம் தான் தற்போது இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம். கடந்த ஆண்டு இவரது பிறந்தநாளுக்கு வைத்த ரசிகர்கள் சந்திப்பில் கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்ததால் கோயம்புத்தூரே திணறிப் போனது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான டிடிஎப் வாசனுக்கு அப்போதிருந்து தான் பஞ்சாயத்தே ஆரம்பித்தது. தொடர்ந்து பல இடங்களுக்கும் பைக்கில் சென்ற டிடிஎஃப் வாசனுக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக அடுத்தடுத்து அபராதங்கள் விதிக்கப்பட்டது.
மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவுக்கு பைக்கில் சென்ற போது காஞ்சிபுரத்தில் அதிவேகமாக பயணித்தார் டிடிஎப். அப்போது வீலிங் செய்ய முயன்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்த அவரது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் விபத்தில் சிக்கியது. இதில் கைதாகி ஜாமினில் வெளிவந்த அவரது லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்டது. தொடர்ந்து கார் லைசென்ஸ் வாங்கிய அவர், செல்போன் பேசிக் கொண்டே கார் ஓட்டிய வழக்கில் கைதானார், அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரையில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தை விட்டு தற்போது ஒரு சேஞ்சுக்காக ஆந்திராவில் பஞ்சாயத்து செய்து சிக்கலில் சிக்கி இருக்கிறார் டிடிஎஃப் வாசன். இந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை கோவிலுக்கு தனது நண்பர்களுடன் சென்று இருக்கிறார் டிடிஎஃப் வாசன். அப்போது சாதாரண தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களை புண்படுத்தும் வகையில், பிராங்க் வீடியோ எடுத்ததோடு அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்.
பக்தர்களை கிண்டல் செய்யும் வகையிலும் பொது மக்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட வகையிலும் வெளியிட்ட டிடிஎஃப் வாசனுக்கு கடும் கண்டனங்கள் குவிந்தது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு திருப்பதி காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக உடனடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என டிடிஎஃப் வாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் விரைவில் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிய விளக்கம் அளிக்கப்படாவிட்டால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications