திருப்பதி தேவஸ்தான அறையில் தங்கியிருந்த சென்னை பக்தர்! பாத்ரூமில் மின்னியதால் ஊழியர் அதிர்ச்சி!
திருப்பதி: திருப்பதி திருமலையில் அறை எடுத்து தங்கியிருந்த சென்னை பக்தர் ஒருவர் குளியலறையில் தங்க செயினை விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அறைகளில் பக்தர்கள் தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு நாளைக்கு ரூ 100 முதல் 1000, 2000 வரை வாடகைக்கு அறைகள் உள்ளன.

பக்தர்கள் அறையை எடுத்து அங்கு குளித்து முடித்துவிட்டு தங்களது உடைமைகளை வைத்துவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்வர். அங்கிருந்து மீண்டும் வந்து அறையை காலி செய்துவிட்டு தங்கள் ஊர்களுக்கு செல்வர் .
ஒவ்வொரு முறையும் பக்தர்கள் தங்கியிருந்த அறை சுத்தம் செய்யப்பட்டு தான் அடுத்த பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்படும். அந்த வகையில் ஒரு அறையில் சென்னையை சேர்ந்த அன்பு என்பவர் குடும்பத்தினருடன் தங்கியிருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அறையை காலி செய்ததும் அந்த அறையை தேவஸ்தான ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
அப்போது குளியல் அறையில் ஒரு ஆணியில் தங்க செயின் இருந்ததை பார்த்த ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதை அவருடைய மேல் அதிகாரியிடம் கொடுத்தார். இதனிடையே பாத்ரூமில் குளித்த போது செயினை மறந்துவிட்டது நினைவுக்கு வந்தது.
எப்படி செயினை பெறுவது என்ற தவிப்பில் இருந்த போது, தேவஸ்தான அதிகாரிகள் அவர் அறை எடுத்த போது கொடுத்த செல்போனை நம்பரில் தொடர்பு கொண்டு தங்க செயின் விவகாரத்தை தெரிவித்தனர்.
இந்த நகையை பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்ததன் பேரில் அன்பு, திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று ரூ 10 லட்சம் மதிப்பிலான செயினை பெற்றுக் கொண்டார். அறையை தூய்மை செய்த ஊழியருக்கும் தேவஸ்தான அதிகாரிகளுக்கும் அன்பு, நன்றித் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications