"இந்துக்கள் தாக்கப்பட்ட போது அமைதியாக இருந்தவர் தானே அவர்.." பிரகாஷ் ராஜுக்கு பவன் கல்யாண் பதிலடி
அமராவதி: திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் இடையே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே நமது ஒன் இந்தியா தளத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் இது குறித்து பவன் கல்யாண் பல முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படும் போது பிரகாஷ் ராஜ் அமைதி காத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ள நெய் சேர்க்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

இதில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி கருத்துகளைக் கூறியிருந்தனர்.
பவன் கல்யாண்: இது தொடர்பாகப் பவன் கல்யாண் தனது ட்விட்டரில், "திருப்பதி பிரசாதத்தில் மீன் எண்ணெய், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி கண்டறியப்பட்டுள்ளது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் ஒன்றிணைய வேண்டும். எந்த வடிவத்திலும் சனாதன தர்மத்தை யாரும் இழிவுபடுத்தக் கூடாது.
ஒய்எஸ்ஆர் அரசு அமைத்த திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் குறித்த பிரச்சினையை ஆராய ‛சனாதன தர்ம ரக்சனா வாரியம்' அமைக்கப்பட வேண்டும்" என்றார்.
பிரகாஷ் ராஜ்: இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்திருந்தார். அதில் அவர், "அன்புள்ள பவன் கல்யாண், நீங்கள் துணை முதல்வராக உள்ள மாநிலத்தில் இது நடந்துள்ளது. நீங்கள் தான் குற்றவாளியைப் பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு தேவையற்ற அச்சத்தைப் பரப்புவது ஏன்? இதை தேசியளவில் பெரிய பிரச்சினையாக ஊதி பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஏற்கனவே நாட்டில் போதுமான வகுப்புவாத பதற்றங்கள் உள்ளன" என்று பதிலளித்திருந்தார்.
நல்லுறவு: பிரகாஷ் ராஜின் இந்த கருத்துக்கு ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பவன் கல்யாண் பதிலளித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு அவர், "ஒரு நடிகராக பிரகாஷ்ராஜை மதிக்கிறேன். அவரை எனக்குப் பிடிக்கும். அவருடன் ஒரு நல்லுறவு இருக்கிறது. அதேநேரம் இந்த விஷயத்தில் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை..
திருப்பதியில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டின் புனிதத்தன்மை மீறப்படுவது மட்டுமே எனக்குக் கவலை.. அதற்குக் காரணமான தரப்பினர் தண்டிக்கப்பட வேண்டும் என்றே சொல்லி வருகிறேன். அதற்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரகாஷ் ராஜின் கருத்துக்களில் அரசியல் உள்நோக்கம் இருக்கும் எனச் சந்தேகம் எழுகிறது. தேவையில்லாமல் அவர் பாஜக மற்றும் பிரதமர் மோடியை ஏன் இதில் இழுக்கிறார். .
வங்கதேச இந்துக்கள்: பிரகாஷ் ராஜ் அவர் ஒரு மதச்சார்பின்மைவாதியாக இருக்கலாம். அவருடைய எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனது கேள்வி என்னவென்றால், வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படும்போது அவர் எங்கே இருந்தார்? அவர் அதைப் பற்றி கருத்து தெரிவித்தாரா? பிரகாஷ் ராஜ் மட்டுமல்ல, பல மதச்சார்பின்மைவாதிகள் அமைதியாகவே இருந்தனர்.
இந்து மதத்தினர் குறித்து எளிதாகக் கருத்துச் சொல்லும் அவர்கள். மாற்று மதத்தினர் பற்றி வாய் திறக்க அஞ்சுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப்பாதை. இந்து மதத்திற்கு வெளியே என்ன நடந்தாலும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் மதச்சார்பின்மை என்றால் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டும் தானே.. ஒரு சராசரி இந்தியன் அதைத்தான் விரும்புவான்.
100 முறை யோசியுங்கள்: இந்த பிரச்சினையை ஆந்திராவுடன் சுருக்கி பார்க்க முடியாது. உலகெங்கும் உள்ள ஏழுமலையான் கோயில் பக்தர்கள் தொடர்புடையது இது. எனவே, பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் பேசும் முன் 100 முறை யோசியுங்கள் அல்லது பேசவே தேவையில்லை. பிரகாஷ் ராஜ் தனது வார்த்தைகளைக் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications