Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EXCLUSIVE: திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் பேட்டியை ஊடகங்கள் திரித்துவிட்டன.. பவன் கல்யாண் பேட்டி

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி, பன்றிக்கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை தேவஸ்தான செயல் அதிகாரி மறுத்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. கலப்பட நெய் ஒரு போதும் பயன்படுத்தப்படவில்லை என்று கூறியிருந்ததால் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திருப்பதி லட்டு தயாரிக்கும் போது கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி, பன்றிக்கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சை, லட்சக்கணக்கான பெருமாள் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லட்டு தயாரிக்க கலப்பட நெய் எப்போதாவது பயன்படுத்தப்பட்டது என்பது பற்றிய முரண்பாடான தகவல்கள் பரவியது குழப்பத்தை அதிகரித்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆந்திரப் பிரதேச அரசின் சில அறிக்கைகளும் இருந்தன.

pawan kalyan lattu

ஆந்திர அரசின் அறிக்கையில், பல சந்தர்ப்பங்களில் கலப்பட நெய் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திய இருந்தது. ஆனால் ஊடகங்களோ,. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) செயல் அதிகாரி, "கலப்பட நெய் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை" என்று பேசியதை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டதால் குழப்பத்தை அதிகரித்தது. அப்படி என்றால் யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்று கேள்விகள் எழுந்தன.

இந்த குழப்பங்களுக்கு ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஒன்இந்தியா செய்தி ஊடகத்திற்கு பவன் கல்யாண் அளித்த பேட்டியில், "கலப்படம் செய்யப்பட்ட நெய்யை பயன்படுத்தாமல் இருந்திருந்தால், பிரச்னை இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. இந்த விவாகரம் குறித்து அரசின் சார்பில் அறிக்கைகளை வெளியிடும் முன்பு நாங்கள் எப்போதும் கவனமாக இருந்து வருகிறோம். திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய செயல் அதிகாரி தனது பேட்டியில் கூறியது தற்போதைய சூழ்நிலையைப் பற்றி அல்ல. கடந்த காலங்களில் நடந்தை பற்றித்தான் கூறியிருந்தார்.

நாங்கள் (சந்திரபாபு, பவன் கல்யாண் அரசு) பொறுப்பேற்ற பிறகான காலகட்டத்தில் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. முன்னதாக பிரசாத்தின் தரம் குறித்து நீண்ட நாட்களாக கவலை தெரிவித்து வருகிறோம். புதிய தேவஸ்தான் செயல் அதிகாரி, வந்தவுடன், கலப்பட நெய் சப்ளை செய்யும் நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்ததுடன், முறையாக பரிசோதிக்கப்பட்ட நெய் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை பேட்டியில் தெளிவுபடுத்தினார். ஆனால் தற்போதைய சூழலில் அவரது வார்த்தைகளை சிலர் திரித்து வெளியிட்டு விட்டார்கள்.

இதன் காரணமாகவே திருப்பதி தேவஸ்தான் செயல் அதிகாரியின் அறிக்கை மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம். குறிப்பாக பேட்டியை மொழிபெயர்த்து வெளியிட்டதில் தவறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. தெலுங்கில் கூறியிருந்தால் சரியான வார்தைகளில் வந்திருக்கும். ஆனால் ஆங்கிலத்தில் அது வித்தியாசமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் அவரிடம் இதுபற்றி தனிப்பட்ட முறையில் கேட்டபோது, ​​​​கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட பிறகு, புதிய நிறுவனங்களின் நெய் பரிசோதிக்கப்பட்டது என்றும் அது நல்ல தரம் வாய்ந்தது என்றும் என்னிடம் உறுதிப்படுத்தினார். அதைத்தான் அவரும் குறிப்பிட்டார். ஆனால் சிலர் வேண்டுமென்றே வார்த்தைகளைத் திரித்துவிட்டார்கள்.

முக்கிய ஊடகங்களிலும் இதுபற்றி செய்திகள் வேகமாக பரவின. திருப்பதி தேவஸ்தான் அறிக்கை பற்றிய சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊடகங்களில் வெளியான செய்திகளால் பக்தர்களிடையே பரவலான குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் கூட்டணி அரசின் அறிக்கைகளுக்கு முரணான கலப்பட நெய்யைப் பயன்படுத்துவதை திருப்பதி தேவஸ்தான் அதிகாரி முற்றிலும் மறுத்ததாக செய்திகள் வெளியாகின.

எனவே இந்த விவகாரத்தை பொறுத்தை உணவில் கலப்படம் என்ற எளிய உண்மைகளை புரிய வைக்கும் விஷயம் ஒருபுறம் எனில், திருப்பதி தேவஸ்தானத்தையும் அத்தகைய மரியாதைக்குரிய நடைமுறைகளின் புனிதத்தன்மையைப் பேணுவதில் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடன் பதில் அளிப்பது மிகவும் அவசியம் ஆகும்" இவ்வாறு பவன் கல்யாண் பேட்டியில் கூறினார்.

திருப்பதி லட்டு விவகாரத்தில் சர்ச்சை தொடர்ந்து வெளிவரும் நிலையில், பவன் கல்யாணின் பேட்டி, லட்சக்கணக்கான பக்தர்களை விடை தெரியாத கேள்விகளுக்கு தெளிவு கிடைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் திருப்பதி லட்டு விவகாரத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் புனிதம் மற்றும் பக்தர்களின் நம்பிக்கை நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+