Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு தந்த காசைகூட விடாத ஆந்திர கொத்தனார்.. தல்லிக்கு வந்தனம்.. கூலாக வேலைக்கு போன பாசக்கார ரமாதேவி

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: கணவர் மதுவுக்கு அடிமையானதால், தன் மனைவி, குழந்தைகளை பற்றி கவலைப்படாமல் இருந்து வந்துள்ளார்... இதனால் வெறுப்படைந்த மனைவி, வேறு ஒரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தார்.. இதனால் அவ்வபோது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், திடீரென இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை ஆந்திர மாநில போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது ஆந்திராவில்? தல்லிக்கு வந்தனம் என்பது என்ன?

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ளது வான்கொல்லா என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சந்திரசேகர்.. மனைவியின் பெயர் ரமாதேவி.. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.. இவருக்கு திருமணமாகி 20 வருடங்களாகிறது.

talliki vandanam government scholarship mason

46 வயதான சந்திரசேகர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். ஆனால், மதுபோதைக்கு அடிமையானவராக உள்ளார்.. இதனால் தினமும் பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பும்போது, தண்ணி அடித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

கொத்தனார் செய்த காரியம்

சம்பாதிப்பதை பெரும்பாலும் குடிப்பதற்கே செலவு செய்து வந்துள்ளார். இதனால், குடும்பத்தைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில்தான், ரமாதேவிக்கு அங்கிருந்த நபருடன் தகாத உறவு ஏற்பட்டது.. பாலம்கொண்டாவை சேர்ந்த அந்த நபருடன் ரமாதேவி உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளார்.. இந்த விஷயம் சந்திரசேகருக்கு தெரிந்து கொந்தளித்துள்ளார். எனவே, வழக்கத்தைவிடவும் அதிகமாக மதுஅருந்திவிட்டு, வீட்டுக்கு வந்து ரமாதேவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார்..

தல்லிக்கு வந்தனம்

இதனிடையே, தல்லிக்கு வந்தனம் என்ற திட்டத்தின் கல்வி உதவித்தொகை ரமாதேவியின் 2 குழந்தைகளுக்கும் கிடைத்துள்ளது.. தல்லிக்கு வந்தனம் என்ற திட்டத்தை, ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 15000 ரூபாயை வழங்கி, ஆந்திர அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த கல்வி உதவித்தொகைதான், சந்திரசேகரின் 2 பிள்ளைகளுக்கும் சேர்த்து ரூ.26 ஆயிரம் கிடைத்துள்ளது.. இந்த பணம், ரமாதேவியின் வங்கி கணக்கிலும் அரசு தரப்பில் டெபாசிட் செய்யப்பட்டது.. இந்த விஷயம் தெரிந்த சந்திரசேகர், அந்த பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்து மது குடித்து வந்துள்ளார்..

அரசு வழங்கும் கல்விப்பணம்

ஏற்கனவே கணவர் மீது கடுப்பில் இருந்த ரமாதேவி, பிள்ளைகளின் கல்விப்பணத்திலும் குடிப்பதா? என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.. இதனால் தம்பதிக்குள் பிரச்சனை வெடித்துள்ளது..

இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு 11 மணியளவில், சந்திரசேகர் ரமாதேவியிடம் மது வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திய ரமாதேவி, மதுவில் விஷத்தை கலந்து கணவருக்கு தந்துள்ளார்..

மதுவை குடித்து போதையில் சரிந்து விழுந்தார் சந்திரசேகர்.. உடனே மகாதேவி, சந்திரசேகரின் கழுத்தை நெரித்தார். பிறகு கட்டையை எடுத்து சரமாரியாக அடித்தார். இதில் சந்திரசேகர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்... அதற்குள் மதுவில் கலந்த விஷம் வேலையை காட்டியது.. விடிகாலையிலேயே ரத்த வாந்தி எடுத்தபடி இறந்து கிடந்தார் சந்திரசேகர்..

ஆனால் ரமாதேவி எதுவும் தெரியாததுபோல், காலையில் எழுந்து, ரத்தக் கறைகளை மட்டும் சுத்தம் செய்துவிட்டு, வழக்கம்போல் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டாராம்..

ஒப்பாரி வைத்த ரமாதேவி

பிறகு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார்.. அப்போதுதான், தன்னுடைய கணவர் மது அருந்தி இறந்துவிட்டதாக, உறவினர்களுக்கும், அக்கம் பக்கம் வீட்டாரிடம் சொல்லி அழுது ஒப்பாரி வைத்துள்ளார்.. இதனால் உறவினர்கள் பதறித்துடித்து ஓடிவந்தனர்..

அப்போதுதான், சந்திரசேகரின் உடலில் காயங்கள் இருந்ததை, அவரது தம்பி மகேஷ் கவனித்துள்ளார்.. உடனே போலீசில் இது தொடர்பாக புகாரும் தந்தார். இதையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார், சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு வைத்தனர்..

இறுதியில், சந்திரசேகரின் கழுத்து நெரிபட்டதாகவும், விஷம் உடம்பில் கலந்திருப்பதாகவும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. இதற்கு பிறகே ரமாதேவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோதுதான் மொத்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தது.. இப்போது, அவரை கைது விசாரித்து வருவதாக, டிஎஸ்பி மகேந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+