திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றுவோர் இந்துக்களாக இருக்க வேண்டும்! புதிய அறங்காவலர் அதிரடி
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேலை செய்வோர் இந்துக்களாக இருக்க வேண்டும் என கோயில் அறங்காவலர் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். இந்த குழுவில் உறுப்பினர்களாக 24 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பி.ஆர்.நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னை அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்த சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் லோகேஷ் உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது என் பாக்கியம். கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடத்தியதை போல் அல்லாமல் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மையாகவும் உண்மையாகவும் இருக்க பாடுபடுவேன். திருமலை தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்.
தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை வேறு பணிக்கு மாற்றி நியமிப்பதா அல்லது கட்டாய ஓய்வு அளித்து அனுப்புவதா என மாநில அரசுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். இது என்னுடைய முதல் முயற்சியாகும். தேவஸ்தான அறக்கட்டளையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக எனக்கு புகார்கள் வந்துள்ளன.
எல்லாவற்றையும் தீர்க்கலாம். நான் சித்தூர் மாவட்டம். அடிக்கடி திருப்பதிக்கு போய் சுவாமி பார்ப்பேன். அப்படிப்பட்ட என்னை அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ஷ்டம். கோயிலில் பணியாற்றும் மாற்று மதத்தினரை நீக்குவது என்பது சற்று சிரமமான காரியம்தான் . இருந்தாலும் இந்த முடிவை அனைவரும் ஏற்க வேண்டும்.
ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில் திருப்பதி தனது புனிதத்தை இழந்துவிட்டது. வழக்கமாக திருப்பதி கோயிலுக்கு ஆண்டுக்கு 5 அல்லது 6 முறை செல்வது வழக்கம். ஆனால் ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளும் நான் திருப்பதிக்கு செல்லவே இல்லை என தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications