நடுவானில் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறு.. திருப்பதியில் அவசர அவசரமாக தரையிறக்கம்
ஐதராபாத்: சமீபகாலமாக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதும், அவசர அவசரமாக தரையிறக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், திருப்பதியில் இருந்து ஐதராபாத் சென்ற விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, திருப்பதில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விமானத்தில் பயணித்த மற்றும் விபத்துக்குள்ளான விடுதியில் இருந்த மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. பின்னர், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருகிறது. இதனால், பயணிகளில் பாதுகாப்பு கருதி உடனடியாக விமானங்கள் தரையிறக்கப்படுகின்றன.
இந்நிலையில், திருப்பதியில் இருந்து ஐதராபாத் சென்ற விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, திருப்பதில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ஐதராபாத்திற்கு நேற்று இரவு 7.55 மணியளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணிகள் பயணித்தனர். இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்துள்ளது. அப்போது, விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது விமானிக்கு தெரியவந்துள்ளது.
இதனால், சுமார் 30 நிமிடங்கள் நடுவானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்துள்ளது. பின்னர், இண்டிகோ விமானத்தை விமானி மீண்டும் திருப்பதியில் அவசர அவசரமாக தரையிறக்கினார். இதைத்தொடர்ந்து, விமானத்தில் பயணித்த விமானிகள் அனைவரும் பாதுகாப்பாக விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில், விமானிகள், பயணிகள் என யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications