கவுண்ட் டவுன் ஸ்டார்ட்! நாளை விண்ணில் பாயுது பிஎஸ்எல்விசி-61 ராக்கெட்! விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பு
திருப்பதி: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை இஸ்ரோவின் 101 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.. ராக்கெட்டுக்கான இறுதி கட்டப் பணியான 22 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 7.59 மணிக்கு தொடங்குகிறது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்.. இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு கழகம் இஸ்ரோ நாளை தன்னுடைய 101வது விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது. நில கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை ஆகிய தேவைகளுக்காக நாளை அதிகாலை இஸ்ரோ ரிசார்ட் பி என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து விண்ணில் செலுத்துகிறது.

புவி கண்காணிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது, 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. ஆர்ஐஎஸ்ஏடி-1பி செயற்கைகோள் மூலம் பூமியிலுள்ள சிறிய அளவிலான பொருட்களையும் துல்லியமாக கண்டறியும் புவி கண்காணிப்புக்காக இந்த செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-61 என்ற ராக்கெட் மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது..
திரவ எரிபொருள்
இந்த ராக்கெட்டுக்கு தேவையான திட மற்றும் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு தயாராக உள்ளது... ராக்கெட்டுக்கான இறுதி கட்டப் பணியான 22 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 7.59 மணிக்கு ஆரம்பமாகிறது.. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, இந்திய விண்வெளி ஆய்வு கழகம் இஸ்ரோ ஒவ்வொரு முறையும் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு முன்பு அதன் தலைவர் மற்றும் விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவில், சூலூர் பேட்டையில் உள்ள செங்கம் செங்காளம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று வேண்டி வழிபாடு மேற்கொள்வது வழக்கமாகும்.
விண்கலம் நாளை ஏவப்படுகிறது
அந்தவகையில், விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளதால், நேற்று விண்கலத்தின் மாதிரியுடன் திருப்பதி மலைக்கு விஞ்ஞானிகள் குழுவினருடன் இஸ்ரோ தலைவர் நாராயணன் வந்திருந்தார்.
ஏழுமலையானை வழிபட்ட நிலையில் அவருக்கும் விஞ்ஞானிகள் குழுவினருக்கும் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் வேதபண்டிதர்கள் வேத ஆசி வழங்கினார்கள். அதேபோல, விண்ணில் பாய இருக்கும் விண்கலத்தின் மாதிரி, ஏழுமலையான் திருவடிகளில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன..
பூமி கண்காணிப்பு
சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன்,"கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்ரோ, 63ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ராக்கெட்டில் 1,710 கிலோ எடைகொண்ட இஓஎஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
பிறகு, நாசாவுடன் அமெரிக்கா, இந்தியா இணைந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும்.. இதனையடுத்து வணிக ரீதியான அமெரிக்கா செயற்கைக்கோள் விண்ணில் செலுத்த உள்ளது. ககன்யான் திட்டம் மிக சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டு மனிதர்கள் இல்லாமல் அனுப்பி வைக்கப்படும். 2027, மார்ச் மாதத்தில் மனிதர்களுடன் ககன்யான் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்..
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications