ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு நாளில் கொட்டி தீர்க்கும் கனமழை... பந்தல் சேதம்
Recommended Video
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்க உள்ள நிலையில், விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் சேதமடைந்தது.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 151 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது.
இந்நிலையில் விஜயவாடா அருகே இந்திர காந்தி மைதானத்தில் நடைபெறும் விழாவில் நண்பகல் 12:23 மணிக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப் பிராமணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இன்று பதவியேற்பு
தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திராவின் 2-வது முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கிறார். இந்த விழாவில் ஜெகன் மோகன் மட்டுமே பதவியேற்க உள்ளதாகவும், அவரது அமைச்சரவை சகாக்கள் வரும் 7-ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பதவியேற்பைத் தொடர்ந்து, டெல்லி செல்லும் ஜெகன் மோகன் ரெட்டி, நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.

முக்கிய வாக்குகுறுதிகள்
பதவியேற்புக்கு பிறகு ஆந்திர மாநிலத்துக்கான தொலைத் நோக்கு திட்டம் குறித்து உரையாற்றும் ஜெகன் மோகன், தேர்தலில் அளித்த 9 முக்கிய வாக்குகுறுதிகளை தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்தல் சேதம்
இந்தநிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவுக்காக, விஜயவாடாவில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் விதமாக, பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. திடீரென அங்கு நேற்றிரவு பெய்த கனமழையால், பதவியேற்பு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த விழா பந்தல் சேதமடைந்தது.

தொண்டர்கள் நம்பிக்கை
அதனை சரிசெய்யும் பணியும், மழையால் ஏற்பட்ட தண்ணீரை வெளியேற்றும் பணியும் அங்கு தீவிரமாக நடந்து வருகிறது. ஆந்திராவில், பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கும் நாளில் கொட்டித் தீர்க்கும் மழையால், விடிவு காலம் பிறக்கும என்ற நம்பிக்கை வந்துள்ளதாக அக்கட்சியின தொண்டர்கள் பேசிவருவதை கேட்கமுடிகிறது.

மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
இதற்கிடையே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று அவரது பதவியேற்பு விழாவில், பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விஜயவாடா சென்றுள்ளார்.

முதல்வர் பயணம்
இதே போல், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications