"என்னை ஒருத்தரும் மதிக்கிறது இல்லை".. கண்ணீர் விட்டு அழுத ரோஜா.. தேவஸ்தானம் மீது குற்றச்சாட்டு
திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீது ரோஜா கண்ணீர் புகார் தந்துள்ளார்
திருப்பதி: "என்னை ஒருத்தர் கூட மதிக்கிறது இல்லை.. திருப்பதி கோயிலில் எனக்கு துளியும் மரியாதை தருவதில்லை" என்று நடிகை ரோஜா கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து போவார்கள்.. இந்நிலையில், திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது, உரிமை குழு தலைவரிடம் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில தொழிற்சாலை துறை உட்கட்டமைப்பு கழக தலைவருமான நடிகை ரோஜா ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
அவர் அதிகாரியிடம் சொல்லும்போது, "என்னை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்... எனது பதவிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.. அதை யாருமே தருவதில்லை.. ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்தோடு சென்றாலும், அப்போதும் தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை தருவதில்லை.. என்னை யாருமே ஒரு பொருட்டாக கூட எடுத்து கொள்வதில்லை" என்று கண்ணீருடன் சொல்லவும், அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பு தொற்றி கொண்டது.
இதையடுத்து ரோஜாவின் முறையீடு பற்றி அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என உரிமை குழு தலைவர் தெரிவித்தார்... ஏற்கனவே ரோஜா, இதற்கு முன்பும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு உயரதிகாரிகள், தனது சொந்த கட்சியினர் மதிப்பதில்லை என கட்சி மேலிடத்திற்கு புகார் தெரிவித்திருந்தார்... இப்போது தேவஸ்தான அதிகாரிகள் தன்னை மதிப்பதில்லை என்று சொல்லி உள்ளார்.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என்பது அனைத்து தரப்பு மக்களாலும் பரவலாக சொல்லப்படும் குற்றச்சாட்டாகும்.. ஆனால், இப்போது அம்மாநிலத்தின் நகரி தொகுதி எம்எல்ஏவே அந்த குற்றச்சாட்டை சொல்லி உள்ளதுதான் பரபரப்பாகிவிட்டது.
இதில் ஒரு ஸ்பெஷல் என்றால், திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு தலைவராக உள்ள சுப்பாரெட்டி என்பவர் முதல்வர் ஜெகன்மோகனின் சித்தப்பாவாம்.. தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலராக உள்ள தர்மாரெட்டி, ஜெகன்மோகனின் சின்ன மாமனாராம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications