250 ஐட்டங்களுடன் மருமகனுக்கு மறக்க முடியாத சங்கராந்தி விருந்து.. அசத்திய மாமியார்
திருப்பதி: ஆந்திராவில் புதிய மருமகனுக்கு 250 வகையான பதார்த்தங்களுடன் சங்கராந்தி விருந்தளித்து அசத்தி இருக்கிறது அவரது மாமியார் குடும்பம். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை பொறுத்தவரை, மிக விஷேசமான பண்டிகை என்றால் அது சங்கராந்தி தான். நமது ஊரில் வழிபடும் பொங்கல் திருவிழாவை சில சில மாற்றங்களுடன் அப்படியே அவர்களும் கொண்டாடுவார்கள். தீபாவளி, விஜயதசமியை விடவும் முக்கியமான பண்டிகை என்றால் அது சங்கராந்தி பண்டிகை தான். நமது ஊரில் மருமகன்களுக்கு தல தீபாவளி எப்படியோ அப்படித்தான் ஆந்திராவில் மருமகன்களுக்கு சங்கராந்தி பண்டிகை..

தெலுங்கு மக்கள் எங்கே வேலை செய்து வந்தாலும், சங்கராந்தி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போய் விடுவார்கள். சங்கராந்தி பண்டிகையின் போது, புதியதாக திருமணம் ஆனவர்களுக்கு மருவீட்டு விருந்து அற்புதமாக இருக்கும். குறிப்பபாக மகளுடன் வரும் மருமகனை, மாமியாரும், மாமனாரும், மைத்துனரும் கவனிக்கும் விதமே அலாதியானது. நமது ஊர்களில் பொங்கல் சீர் எடுத்து மருமகனின் வீட்டிற்கு போய் கொடுப்பார்கள் என்றால், ஆந்திராவில் மருமகனை மகளுடன் அழைந்து வந்து சங்கராந்தி விருந்து படைப்பார்கள்.
அதற்கான உதாரணங்களை கடந்த சில வருடங்களாக நீங்களே பல வீடியோக்கள் பார்த்திருப்பீர்கள்.. 100 வகை பதார்த்தங்களை மருமகனுக்கு விருந்து வைத்த மாமியார், 150 வகையான பதார்த்தங்களுடன் சங்கராந்தி விருந்தளித்து அசத்திய மாமியார், 200 வகையான பதார்த்தங்களுடன் சங்கராந்தி விருந்தளித்து அசத்திய மாமியார் குடும்பம் என பல வீடியோக்கள் இணையத்தில் இன்றும் இருக்கிறது. மருமகனை அந்த அளவிற்கு கவனிப்பார்கள்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஒரு மாமியார் தனது மருமகனுக்கு 250 வகையான உணவுகளை வழங்கி ஆச்சரியப்படுத்தி அசத்தி உள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி விழா போகி பண்டிகை தொடங்கியதில் இருந்து கோலாகலமாக நடந்து வருகிறது. சங்கராந்தி விழா மொத்தம் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. போகியுடன் தொடங்கிய சங்கராந்தி விழா காணும் பொங்கலுடன் ஆந்திராவில் நிறைவடைந்தது. மக்கள் சங்கராந்தியை பக்தியுடன் கொண்டாடி விலங்குகளை வணங்குவார்கள். குறிப்பாக கிராமங்களில் மாடுகள் சேவல்களை வைத்து மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகள் நடக்கும்.
கடந்த ஆண்டு சங்கராந்தியின் போது புதுமாப்பிள்ளைக்கு (மருமகனுக்கு ) அளித்த அமோக விருந்தோம்பலை கோதாவரி மாவட்ட மக்கள் இன்னும் மறக்கவில்லை. கடந்த ஆண்டு, சங்கராந்திக்கு வீட்டுக்கு வந்த மருமகனுக்கு, 173 வகை பதார்த்தங்களை பரிமாறி அசத்தினார் ஒரு மாமியார். கடந்த ஆண்டு உணவு பரிமாறப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இப்போது விசாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன. '

விருந்தோம்பலில் தங்களை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை விசாகப்பட்டினம், கிருஷ்ணா உள்ளிட்ட கடலோர மாவட்ட மக்கள் நிரூபித்துள்ளனர். பொதுவாக விசாகப்பட்டினம், கிருஷ்ணா மாவட்டத்தில் தான் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடக்கும். அந்த வகையில் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சித்தூர்பு கிராமத்தைச் சேர்ந்த ஜி சாய்நாத்தின் குடும்பத்தினர் 250 உணவு வகைகளை தங்கள் மருமகனுக்கு சமைத்து வழங்கி உள்ளார்கள். புதுமணத் தம்பதிகளான ரேவந்த்-நவ்யாவுக்கு இது மறக்க முடியாத விருந்து என்று சொல்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக, மாமியார் தங்கள் வீட்டில் மருமகன்களுக்கு பலவித விருந்துகளை வழங்குவதும், அதை சமூக வலைதளங்களில் வைரலாக்குவதும் ஒரு ட்ரெண்டாக ஆந்திராவில் மாறி வருகிறது. இதனை நெட்டிசன்கள் பார்த்து வாயை பிளக்கிறார்கள். இப்படி ஒரு மாமியார் இருப்பது புண்ணியம் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக இருந்தாலும், விளம்பரத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்படுவதாகவும், இதை சாப்பிட்டால் மருமகனை உடனே ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிச்செல்ல வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications