"சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்.." உதயநிதியை சாடிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
திருப்பதி: திருப்பதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக துணை முதல்வர் உதயநிதியை மறைமுகமாக விமர்சித்தார். சனாதனத்தை அழிக்க விரும்புவதாகச் சிலர் சொல்கிறார்கள்.. ஆனால், உண்மையில் சனாதனத்தை அழிக்க விரும்புவோரே அழிந்து போவார்கள் என்றும் சனாதனத்தை உயிரே போனாலும் காப்பேன் என்றும் பவன் கல்யாண் கூறியிருக்கிறார்.
சென்னையில் கடந்தாண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அது அப்போதே மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இதற்கிடையே உதயநிதிக்கு இப்போது பவன் கல்யாண் மறைமுகமாகப் பதிலடி கொடுத்துள்ளார். உதயநிதி பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், சனாதன தர்மத்தை அழிக்க முயல்பவர்களே அழிந்து போவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பவன் கல்யாண்: திருப்பதி லட்டு செய்யப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு இருப்பதாக வெடித்த சர்ச்சை பூதாகரமாகக் கிளம்பியது. இதற்குப் பரிகாரமாக நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் விரதம் இருந்து திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்தில் தனது தொண்டர்களிடையே பேசிய பவன் கல்யாண், "நான் தமிழிலேயே சொல்கிறேன்.. சனாதனம் ஒரு வைரஸ் போன்றது அதை அழிப்போன் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்கிறார். இதற்குப் பதில் நான் சொல்கிறேன்.. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
நான் இங்கு ஏழுமலையான் பாதத்தில் இருந்து சொல்கிறேன் உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கவே முடியாது. சனாதன தர்மத்தை யாராவது அழிக்க முயன்றால் அவர்கள் அழிந்து போவார்கள். உங்களைப் போல நிறையப் பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால், சனாதனத்தை யாராலும் அழிக்க முடியவில்லை. அது அப்படியே நிலைத்து நிற்கிறது.
கண்டிப்பதில்லை: சனாதன தர்மம் மீது தாக்குதல் நடக்கும் போது யாருமே அதைக் கண்டிப்பதில்லை. யாரும் கண்டிக்கவில்லை என்பதால் தவறு சரியாகிவிடாது.. நீங்கள் அரசியல் ரீதியாகச் சரியாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால், நான் மக்களிடையே உண்மையைப் பேச விரும்புகிறேன். மதச் சார்பின்மை என்பது எப்போதும் ஒரு வழிப் பாதையாக இருக்க முடியாது. இது இரு வழிப் பாதை" என்றார்.
தான் ஒரு சனாதன இந்து என்று கூறிய பவன் கல்யாண், என்ன நடந்தாலும் தனது நம்பிக்கையைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். அவர் மேலும் பேசுகையில், "மதச்சார்பின்மைவாதிகள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்ளும் சிலர் எனது சனாதன தர்மத்தை கேலி செய்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். என் உயிரே போனாலும் நான் சனாதன தர்மத்தை காப்பேன். எனது வாழ்க்கை, எனது பதவி உட்பட அனைத்தையும் நான் இழக்க நேரிட்டாலும், அதற்கு நான் தயாராகவே உள்ளேன். சனாதன இந்துவாக நான் எடுத்துக்கொண்ட சத்தியம் இதுதான்.
விமர்சனம்: நமது நாட்டில் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் கடுமையாக நடத்தப்படுகிறார்கள். இந்து மதத்தை விமர்சிப்போரிடம் நீதிமன்றங்கள் மென்மையாக நடந்து கொள்கின்றன. சனாதன தர்மத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் இல்லை. அதேநேரம் மற்ற மதங்களுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்கள் சொன்னால் மட்டும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகிறது" என்று பேசினார்.
பின்னணி: முன்னதாக கடந்தாண்டு சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மாநாட்டின் தலைப்பை சனாதன எதிர்ப்பு மாநாடு என்று வைக்காமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று வைத்துள்ளனர்.. சில விஷயங்களை எதிர்க்க முடியாது.. நாம் ஒழிக்கத்தான் வேண்டும். கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை நாம் எதிர்க்கக் கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அதுபோலத் தான் சனாதனம். சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்யும் முதல் காரியம்... சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது தான் சனாதனம்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications