திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: சந்திரபாபு நாயுடு உறுதி
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். கோவிலில் பிற மதங்களைச் சேர்ந்தர்கள் பணியாற்றினால் அவர்கள் வேறு பணிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள். மத நிறுவனங்களில் அந்தந்த மதங்களைப் பின்பற்றுபவர்களே பணி அமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுவின் பேரனின் 11 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. இதற்காக தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிரம்மினி, மற்றும் பேரனுடன் திருமலை திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். சுவாமியை தரிசனம் செய்த பின்னர் திருமலையில் அன்ன பிரசாதத்திற்காக ரூ.44 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்கினர்.

பின்னர், தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனுக்குச் சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பக்தர்களுக்கு பிரசாதத்தை வழங்கினார். தொடர்ந்து, தேவஸ்தானத்தில் உள்ள வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார். பக்தர்களுடன் இணைந்து முதல்வர் மற்றும் குடும்பத்தினர் உணவு சாப்பிட்டனர்.
அதைத்தொடர்ந்து, திருமலை பத்மாவதி விருந்தினா் மாளிகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளா்களர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது பேரன் தேவான்ஸின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் திருமலைக்கு வருவது வழக்கம். திருமலையில் பக்தர்களுக்கு உணவு பரிமாறுவதை பாரம்பரியமாக மாற்றி கடைப்பிடித்து வருகிறோம். அன்னதான திட்டத்தை முன்னாள் முதல்வர் என்டி ராமாராவ் தொடங்கி வைத்தார். இது மிகவும் புனிதமான என்று நிலைத்திருக்கும் ஒரு திட்டமாகும்.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பிராண தானம் எனும் உயிர் தானம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது சுகாதார உதவியை வழங்குவதற்கான திட்டமாகும். இந்த இரு சேவைகளும் கடவுள், மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் வெங்டேஸ்வரருக்கு அர்ப்பணிப்பதற்கான கோயில்கள் பல்வேறு கிராமங்களில் இதுவரை இல்லை. வெங்கடேஸ்வரருக்கு கோயில்கள் கட்ட நிதி திரட்ட சிறப்பு அறக்கட்டளை ஒன்று அமைக்கப்படும்.
அதேபோல, இந்தியாவின் அனைத்து தலைநகரங்களிலும், உலகில் இந்து மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களைக் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு கோரி கடிதங்கள் அனுப்பப்படும். இதுவரையில் எஸ்.வி. அன்னதானம் அறக்கட்டளைக்கு ரூ. 2,200 கோடி தொகையை பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானத்தில் வணிக ரீதியான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது. வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது. ஏழு மலைளும் ஏழுமலையானுக்கு சொந்தமானது. அதை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. முன்பிருந்த ஆட்சியில் மலை அடிவாரப் பகுதியில் ஹோட்டல்களுக்கு ஒதுக்கப்பட்ட 35.27 ஏக்கர் நிலம் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும்.
திருமலை திருப்பதியின் புனிதத்தை காக்க அனைவரும் பாடுபட வேண்டும். தேவஸ்தான ஊழியர்கள் திருமலையின் புனிதத்தை காக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட வேண்டும். கோயிலில் பணியாற்றும் பிற மதங்களச் சேர்ந்தவர்கள், இடமாற்றம் செய்யப்படுவார்கள். மத நிறுவனங்களில் அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும். கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களில் பிற மதத்தினைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுவதில்லை என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications