திருப்பதி உண்டியலிலும் திருட்டு! பக்தர்களின் சொத்து பத்திர காணிக்கைகள் மாயம்! பவன் கல்யாண் பகீர்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளால் பெருமாளுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையில் கூட திருட்டு நடந்துள்ளது என பவன் கல்யாண் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆந்திரா மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் , தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: லட்டுவை சனாதன தர்மத்துடன் நான் ஏன் பேசுகிறேன் என்றால், நானும் எல்லாரையும் போல் பெருமாள் பக்தர். நான் அமைதியாகவே இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் லட்டு குறித்து எல்லாருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.

tirupati pawan kalyan laddu

அப்போது ஒரு கட்டத்தில் என் கோபத்தின் வெளிப்பாடுதான் சனாதன தர்மம் குறித்த பேச்சு! எதிர்க்கட்சியினர் கூறுவது போல் அரசியல் செய்வதற்கு எனக்கு பாலாஜி தேவையில்லை. பொது விஷயங்கள் நிறைய இருக்கு. அதிலிருந்து நான் திசை திருப்ப எனக்கு என்ன தேவை இருக்கிறது? லட்டு விஷயம் குறித்து 2007 லும் பேசியிருக்கிறேன்.

அந்த நேரத்தில் நான் அந்தளவுக்கு பிரபலமாக இல்லாததால் என் வாய்ஸ் எடுப்படவில்லையோ என்னவோ தெரியவில்லை. நான் 2014 ஆம் ஆண்டும் பேசினேன். ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்துவர் என்பதால் அவரை நான் குறி வைத்து குற்றம்சாட்டுவதாக கூறுவது தவறு. எனக்கு கிறிஸ்துவ நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் கிறிஸ்துவ மதத்தை மதிக்கிறேன். என் மனைவியும் கிறிஸ்துவர்தான்.

ஜெகன் முதல்வராக இருந்த போதிலிருந்தே திருமலையில் தவறு நடப்பதாக நான் பேசிக் கொண்டேதான் இருந்தேன். ஜெகன் நியமித்த தேவஸ்தான குழுவில் அவருடைய உறவினர்கள்தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அப்படியிருந்தும் திருப்பதியின் புனிதத்தை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?

திருப்பதி லட்டு விஷயத்தில் சந்திரபாபு ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையையே ஜெகன் மோகன் ரெட்டி பின்பற்றியிருந்தாலும் நெய் விநியோகம் செய்யும் நந்தினி நிறுவனத்தை மாற்றிவிட்டார்கள். திருப்பதிக்கு இந்த நந்தினி நெய் 40 ஆண்டுகளாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

திருப்பதிக்கு சென்ற ஜெகன் மோகன் ரெட்டி ஏன் தடுக்கப்பட்டார்? ஒவ்வொரு கோயிலுக்கும் சில விதிகள் உள்ளன. அதை பிரதமராக இருந்தாலும் பின்பற்ற வேண்டும். இத்தனை நாள் என்னிடம் அந்த உறுதிமொழி பத்திரத்தில் கேட்கவில்லை என கேட்டால், அவர் முதல்வராக விதிகளை மீறி திருமலைக்கு சென்றுள்ளார்.

விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை திருப்பதி லட்டுக்கு பயன்படுத்தவே இல்லை என்பது ஜெகன் மோகனுக்கு எப்படி தெரியும். இது முதல்வரின் பிரச்சினை இல்லையே, அவர் நியமித்த தேவஸ்தான குழு நிர்வாகிகள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என சொல்கிறோம். இந்த கலப்பட லட்டு என்ற விவகாரத்தை ஜெகன் மோகன் ரெட்டியே கலந்து அவரே லட்டுவை பிடித்து பக்தர்களுக்கு கொடுத்தார் என நாங்கள் சொல்லவில்லை.

அவர் அமைத்த நிர்வாகக் குழு இதை செய்துள்ளனர். அவர் நியாயமாக என்ன சொல்லியிருக்க வேண்டும், "லட்டு தயாரிப்பு நெய்யில் கலப்படமா, அதை யார் செய்திருந்தாலும் தண்டிக்க வேண்டும்" என்றுதானே சொல்ல வேண்டும். தேவஸ்தான நிர்வாக இயக்குநர் ஷியாமளா ராவ் அளித்த பேட்டியில் "லட்டுவில் கலப்படம் இல்லை" என சொல்லியுள்ளார் என்றால் அவர் EO வாக பொறுப்பேற்றதும் கலப்பட நெய்யை திருப்பி அனுப்பியதைதான் சொல்லியுள்ளார்.

950 ரூபாய் நெய்யை ஒருவர் 350 ரூபாய்க்கு எப்படி கொடுக்க முடியும். அந்த நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு என்றில்லை, டால்டா (வனஸ்பதி) கலந்திருந்தாலே அதுவும் கலப்படம் தானே! திருப்பதி லட்டில் கலப்படம் செய்வது என்பது வெறும் டேஸ்ட் குறித்த விஷயம் மட்டுமில்லை. ஒரு பக்தரின் நம்பிக்கையை சீர்குலைப்பது போன்றதாகும். சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் கோயில்களில் மதசார்பின்மையை கொண்டு வராதீர்கள்.

உண்டியலில் எவ்வளவு பணம் காணிக்கையாக வருகிறது என்பதற்கு கூட கணக்கு வைத்திருக்கவில்லை. பெருமாள் உண்டியலில் பக்தர்கள் போடும் பத்திரங்களை கூட காணவில்லை. அதை ஜெகன் மோகன் காலத்தில் இருந்த தேவஸ்தான நிர்வாகிகள் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த சொத்துகளை சிலர் வேறு சிலருக்கு விற்க முயற்சி செய்தனர். பின்னர் இது தெரிந்து நிறைய பேர் குரல் கொடுக்கவே அதை விற்காமல் நிறுத்தியுள்ளனர். இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+