சேகர் ரெட்டிக்கு 'லட்டு' மாதிரி வாய்ப்பு.. திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு பிரதிநிதியாகப் போறாராம்!
திருப்பதி தேவஸ்தான போர்டு பிரதிநிதியாக சேகர் ரெட்டி நியமிக்க வாய்ப்பு உள்ளது
Recommended Video
சென்னை: திரும்பவும் சேகர் ரெட்டி பெயரை தமிழகம் உச்சரிக்க தொடங்கி உள்ளது. திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழக பிரதிநிதியாக சேகர் ரெட்டி மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சேகர் ரெட்டி.. தமிழகம் நன்றாக அறிந்த நபர்தான்.. அதுவும் ஓபிஎஸ் மூலமாக நன்கு அறியப்பட்டவர் மணல் விற்பனை தொழில் செய்யும் தொழிலதிபர்.. இவர் வேலூரை சேர்ந்தவர்.
பண மதிப்பிழப்பின்போது இவரது வீட்டில் சுமார் 300 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவை எல்லாமே புது 2 ஆயிரம் நோட்டுக்கள்.. இது சம்பந்தமாக சிறைக்கு சென்றவர்தான் சேகர் ரெட்டி.

சான்றிதழ்
கைது செய்யப்பட்டபோது, சேகர் ரெட்டி, திருப்பதி - திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக அதாவது தமிழக பிரதிநிதியாக இருந்தார். சிறைக்கு சென்றதால், அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் கைப்பற்றப்பட்ட பணமெல்லாம் சொந்தமாக சம்பாதித்தது என சர்ட்டிபிகேட் தந்ததை அடுத்து அந்த வழக்குகளில் இருந்து வெளியே வந்தார்.

போட்டா போட்டி
இப்போது விஷயம் என்னவென்றால், திரும்பவும் திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகம் சார்பில் இவர் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்த பதவி அத்தகைய பவர்ஃபுல் ஆனது. இந்த பதவியில் இருப்பவர்களுக்கு பிரதமர் அலுவலகம் முதல் சுப்ரீம்கோர்ட் வரை உள்ள அதிகார மட்ட நபர்களுடன் செல்வாக்கை உயர்த்தி கொள்ளலாம். அதற்காகதான் இந்த பதவிக்கு நீ, நான் என தொழிலதிபர்களிடையே போட்டா போட்டி எப்பவுமே இருக்கும்.

போஸ்டிங்
இந்த போஸ்டிங் இப்போது சேகர் ரெட்டிக்கே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. புதியதாக பதவியேற்றுள்ள தேவஸ்தான தலைவரை போன மாசம் சேகர் ரெட்டி சந்தித்துவிட்டு ஒரு வாழ்த்தையும் சொல்லி விட்டு வந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருந்தாலும், சேகர் ரெட்டி பெயர் இப்போது அடிபட்டு வருகிறது.

பரபரப்பு
அறங்காவலர் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் உறுதி செய்யப்படாத பட்சத்தில், தமிழக பிரதிநிதியாக தன்னை நியமிக்க வேண்டும் என்று சேகர் ரெட்டியே கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. சேகர் ரெட்டி என்றாலே பல சர்ச்சைகள் நிறைந்த நபர் என்பது தமிழக மக்கள் மனதில் பதிந்து விட்ட நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இவர் பெயர் மீண்டும் அடிபட்டு வருவது சர்ச்சை கலந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications