• search
திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

லட்சுமி பார்வதி ஐ லவ்யூ சொன்னார்.. ஒரு மாதிரி பேசினார்.. கூப்பிட்டார்.. உதவியாளரின் பரபர புகார்

Google Oneindia Tamil News
  NTR Wife: என்.டி.ஆர். மனைவி லட்சுமி பார்வதி மீது பரபரப்பு புகார்- வீடியோ

  திருப்பதி: ஆந்திராவில் இன்னும் 4 நாளில் தேர்தல் இருக்கும்போது மறைந்த என்டி ராமராவ் மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மாநிலத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சி மற்றும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது!

  நம்ம ஊர் எம்ஜிஆர் மாதிரி... கடவுளுக்கு நிகராக அன்று ஆந்திர மக்களால் அதிசயித்து பார்க்கப்பட்டவர் என்.டி. ராமராவ். அரசியலிலும், திரைப்படத் துறையிலும் பல புரட்சிகளை செய்தவர்.

  1994-ல் தன்னை பற்றி சுயசரிதையை எழுத வந்த லட்சுமி சிவபார்வதி என்ற பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார்.

  நடிகை ரோஜாவுக்கு ஆதரவு... தமிழக நடிகர்கள் பிரச்சாரத்தில் கலகலநடிகை ரோஜாவுக்கு ஆதரவு... தமிழக நடிகர்கள் பிரச்சாரத்தில் கலகல

  பரபரப்பு கல்யாணம்

  பரபரப்பு கல்யாணம்

  அப்போது என்.டி.ஆருக்கு வயது 70... லட்சுமி பார்வதி வயதோ 38! ஒரு கல்லூரி பேராசிரியையாக இருந்தவர். இந்த விஷயம் அன்று நாடு முழுவதும் பற்றிக் கொண்டு எரிந்தது! (இந்த கல்யாண மேட்டரைத்தான் மணிவண்ணன் தனது அமைதிப் படை படத்தில் காட்சியாக வைத்திருப்பார்)

  தெலுங்கு தேசம்

  தெலுங்கு தேசம்

  ஒரு கட்டத்தில் லட்சுமி பார்வதியை அரசியலுக்கு கொண்டுவந்தார் ராமராவ். அரசியலில் லட்சுமி பார்வதி ஆதிக்கம் எல்லை மீறி போகவும், கொதித்தெழுந்தார் என்டிஆரின் மருமகனான சந்திரபாபு நாயுடு. மாமனாரேயே தூக்கி எறிந்து தெலுங்கு தேசத்தை கைப்பற்றி நாட்டையே அதிர வைத்தார்.

  வழக்கு பதிவு

  வழக்கு பதிவு

  என்.டி.ஆர் மறைவுக்கு பிறகு ஒய்எஸ்ஆர் கட்சியில் சேர்ந்தார் லட்சுமி பார்வதி. பிறகு அங்கும் சூழல் பிடிக்காமல் விலகியே இருந்தார். இந்நிலையில், லட்சுமி பார்வதி மீது ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. 5 வருஷங்களாக அவருக்கு உதவியாளராக செயல்பட்டுவரும் கோட்டி என்பவர்தான் இந்த கேஸை அளித்திருக்கிறார். அதுவும் பாலியல் கேஸ் என்பதுதான் அதிர்ச்சியே!

  வாட்ஸ் அப் ஆதாரம்

  வாட்ஸ் அப் ஆதாரம்

  குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெனுகொண்ட போலீஸ் ஸ்டேஷனில் இந்த புகாரை கோட்டி தந்துள்ளார். அதில், 5 வருட காலமாக லட்சுமி பார்வதிக்கு உதவியாக வேலை செய்தேன். சில காலமாகவே அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். ஐலவ் யூ சொல்கிறார், ஒரு மாதிரி பேசுகிறார். அதற்கு ஆதாரமாக வாட்ஸ் அப் மூலம் அவர் எனக்கு அனுப்பிய தகவல்களையும் போலீசில் ஒப்படைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

  ஏன் இந்த தாமதம்?

  ஏன் இந்த தாமதம்?

  விசாரணை ஒரு பக்கம் போகட்டும்.. ஆனால் 5 வருஷமாக பாலியல் தொந்தரவு தந்து கொண்டிருந்தால், அதை இப்போது வந்து ஏன் இந்த கோட்டி என்பவர் கேஸ் தர வேண்டும்? இவ்வளவு காலம் இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சில காலமாகவே அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது.

  யார் செய்த வேலை?

  யார் செய்த வேலை?

  இன்னொரு பக்கம் 4 நாளில் ஆந்திராவில் தேர்தல் நடக்க போகிறது. ஆட்சியை பிடிக்காவிட்டால் மானமே போய்விடும் என்ற நிலையில் சந்திரபாபு நாயுடு இருக்கிறார். மேலும் இளசுகளை கட்டி போட்டாலும், சாதீய வாக்குகளை குறி வைத்து பவன்கல்யாண் கலக்கி வருகிறார். அதனால் இவர்கள் இருவர் தரப்பில் இது யார் செய்த வேலையாக இருக்கும் என்பதுதான் குழப்பமாக உள்ளது! ஆக மொத்தம் இது பாலியல் பிரச்சனை கிடையாது.. எல்லாம் பதவி படுத்தும் பாடுதான் என்று தெரிகிறது!

  English summary
  In Andhra Pradesh, Sexual Harrasement Case filed on Lakshmi Parvati by Kotti. He also provided the WhatsApp chat screenshots were provided the proof of evidence.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X