திருப்பதியில் மகா விசித்திரம்! சாமி சிலையில் ரத்தம் வடியுதா? கலியுக பேரழிவின் முடிவா? பக்தர்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதியில் உள்ள பழமையான திருத்தலத்தில் ஒட்டுமொத்த ஆன்மீக உலகையும் உறைந்து போகச் செய்யும் வகையில் ஒரு மகா விசித்திரமான அதிசயம் அரங்கேறியுள்ளது! கலியுகத்தின் உச்சக்கட்ட விபரீதமா அல்லது இறைவனின் நேரடி எச்சரிக்கையா என்று பக்தர்களை பேரதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டார்களாம். இதுகுறித்த படமும், செய்தியும்தான் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

அம்மன் சிலை கண் திறந்ததாக அடிக்கடி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.. சமீபத்தில் கூட நெல்லை மாவட்டம் திசையன்விளை மெயின் பஜாரில் உள்ள அற்புத விநாயகர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அன்னை மூகாம்பிகை ஆலயத்தில், பூசாரி மாலையலங்காரம் செய்து முடித்த தருணத்தில் அம்மன் கல்சிலையின் கண்களிலிருந்து விசித்திரமான ஒளி வீசியதாகப் பரபரப்பு ஏற்பட்டது.

tirupati idol blood incident tirupati news temple mystery kali yuga viral temple incident devotee fears spiritual news

திருப்பதி கோயில் அதிசயம்

அங்கிருந்த பக்தர்கள் அம்மனின் கண்கள் திறந்திருப்பது போன்ற அதிசயக் காட்சியைக் கண்டு வியந்ததால் நள்ளிரவு வரை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பின்னர் மறுநாள் அதிகாலை நடை திறக்கப்பட்டபோது அம்மனின் கண்கள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இயல்பாக காட்சியளித்திருக்கிறது.

இப்போது திருப்பதியிலும் ஒரு அதிசயம் நடந்துள்ளது.. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சித்வேலு அடுத்த நாகவரம் கிராமத்தில், 1228-ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த பழமையான ஸ்ரீ சென்னகேசவ சாமி கோவில் அமைந்துள்ளது.


சாமி சிலையில் ரத்தம் வடிந்ததா

இந்த கோவில் கருவறையில் உள்ள சாமி சிலையின் பாதத்தில் இருந்து நேற்று காலை ரத்தம் போன்ற விசித்திரமான சிவப்பு நிற திரவம் திடீரென வடியத் தொடங்கியது.

சாமி கல் சிலையில் இருந்து இது போன்ற திரவங்கள் வெளியேறுவது மிகவும் அரிதானது என்பதால், இத்தகவல் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே காட்டுத்தீயாய் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு, சாமி பாதத்தில் இருந்து சிவப்பு நிற திரவம் வெளியேறுவதை ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் கண்டு வழிபட்டனர்.

பேரழிவிற்கான அறிகுறியா?

பிரம்மனின் ஞானத்தின்படி, கலியுகத்தின் முடிவுக்கு முன் சாமி சிலைகள் கண்ணீர் வடிப்பதும் ரத்தம் வடிப்பதும் பேரழிவிற்கான சில அறிகுறிகள் என ஆன்மீகவாதிகள் சிலர் கூறிய கருத்துகளோடு இச்சம்பவம் ஒப்பிடப்படுவதால், ஆந்திர மக்களிடையே இது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சோஷியல் மீடியாவிலும இது தெய்வீக அறிகுறியா அல்லது யுக முடிவின் தொடக்கமா என்ற அச்சம் கலந்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

ஆனால், இதுபோன்ற அதிசயங்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் புவியியல் காரணங்களும் உள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.. பல நூறு ஆண்டுகள் பழமையான கல் சிலைகளில், காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் நிலத்தடி நீர் மட்ட மாறுபாடுகள் காரணமாக நுண்புழை நுழைவு (Capillary action) என்ற இயற்பியல் நிகழ்வு ஏற்படும்.

அறிவியல் சொல்வது என்ன

பாறைகளின் இடுக்குகளில் இருக்கும் கனிமங்கள் மற்றும் இரும்பு ஆக்சைடு போன்ற தாதுக்கள், சிலைக்குள் ஊடுருவும் நீருடன் வேதிவினை புரிந்து வெளியேறும்போது அது அடர்ந்த சிவப்பு அல்லது துரு நிற திரவமாக, பார்ப்பதற்கு ரத்தம் போன்ற தோற்றத்தை அளிக்கிறதாம்.

அதுமட்டுமல்லாமல், பல தலைமுறைகளாக அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய், பால், சந்தனம் மற்றும் குங்குமம் போன்ற பொருட்கள் காலப்போக்கில் கல்லின் உட்புறத்தில் உறிஞ்சப்பட்டு, குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்த மாறுபாடுகளின் போது வேதிமாற்றமடைந்து மீண்டும் வெளியேறும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

இப்படி, பக்தி மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், இத்தகைய இயற்கை மாறுபாடுகளைப் பகுத்தறிவுடன் அணுகி, அச்சப்படாமல் இருப்பதே விவேகமானது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+