தாசில்தார் டக்னு அரசு பெண் அதிகாரி வீட்டில் நின்ற கோலம்! கோழிக்கறி செஞ்சு தருவியா? திகைத்த திருப்பதி
திருப்பதி: பட்டா மாறுபாடு, பட்டாவில் பெயர் மாற்றம் போன்ற திருத்தங்களை செய்யவும், உதவித்தொகையை பெறவும், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறுவதற்காகவும், அவைகளில் திருத்தங்களை செய்வதற்காகவும், விண்ணப்பதாரர்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டிய அவசியம் வருகிறது.. இதுபோன்ற சூழலில் சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொதுவெளியிலேயே சிக்கி கொள்கிறார்கள்.. இதனால், பதிவுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீதான அதிருப்தி பரவலாக உள்ளது.. இதற்கு தாசில்தாரர்களும் விதிவிலக்கல்ல. ஆனால், தனிப்பட்ட ஒழுங்கீனம் காரணமாக, ஒரு தாசில்தார் அசிங்கப்பட்டுள்ளார்.. ஆந்திராவின் திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை மண்டலத்தில், இந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
திருப்பதி மாவட்டத்தில் வகாடு தாசில்தாராக இருப்பவர் ராமையா. இந்த தாசில்தார்களுக்கு எம்ஆர் என்பார்கள்..

ராமையா, இதற்கு முன்பு, பெல்லக்கூர் தாசில்தாராக பணியாற்றி வந்துள்ளார்.. அப்போது அங்குள்ள விஆர்ஓ என்று சொல்லப்படும், கிராம வருவாய் அதிகாரியாக பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்..
கிராம வருவாய் அதிகாரி விஆர்ஓ
இந்த கிராம வருவாய் அதிகாரி மீது, தாசில்தாருக்கு ஆசை வந்துள்ளது. இதனால், அந்த பெண்ணை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று நினைத்துள்ளார். இதற்காக சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியிடம், பலமுறை பாலியல் ரீதியாகவும் டார்ச்சர் தந்துள்ளார்..
ஆனால், எதிர்பாராத விதமாக, ராமையாவுக்கு டிரான்ஸ்பர் வந்துவிட்டது.. அந்தவகையில், தற்போது வகாடுக்கு மாற்றப்பட்டுள்ளார்.. வேறு இடத்துக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்தபோதிலும், அந்த பெண் அதிகாரி மீது, தீராத ஆசை இருந்து வந்துள்ளது.. இதனால், அந்த பெண் அதிகாரியின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார்... பிறகு ஒருகட்டத்தில் நிர்வாணமாக வீடியோ கால் செய்து டார்ச்சர் தந்துள்ளார்..
கோழிக்கறி சமைச்சு தருவியா
"நான் உன் வீட்டுக்கு வரட்டுமா? கோழிக்கறி செய்து தருவியா? நான் கேட்டதை நீ தருவாயா? என்றெல்லாம் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல், திடுதிப்பென்று, கடந்த புதன்கிழமை இரவு அவரது வீட்டிற்கே சென்றுவிட்டார்..
அன்றைய தினம் பார்த்து, அப்பெண் அதிகாரி வீட்டில் யாருமே இல்லையாம். இது தாசில்தாருக்கு படுகுஷியை தந்துவிட்டது.. உடனே அப்பெண்ணின் ரூமுக்கே சென்று நிர்வாணமாக நின்றிருக்கிறார்..
இதைப்பார்த்து பெண் அதிகாரி அதிர்ச்சியடைந்து, அருகில் வசித்து வந்த தன்னுடைய அம்மாவை அழைத்துள்ளார்.. ஏற்கனவே, தாசில்தார் தனக்கு தந்த டார்ச்சர்களை, தன்னுடைய அம்மாவிடம் பெண் அதிகாரி சொல்லியிருந்ததால், அம்மாவும் பதறியடித்து ஓடிவந்துள்ளார்..
ஆடையின்றி நின்ற தாசில்தார்
ஆடையின்றி நின்ற தாசில்தாரை பார்த்ததுமே, துடைப்பக்கட்டையை எடுத்து, தாசில்தார் ராமையாவை துவைத்து எடுத்தார்.. உடனே தாசில்தார் கீழே கிடந்த டிரஸ்ஸை அரையும் குறையுமாக அணிந்து கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடினார். இதை சுற்றுவட்டாரத்திலிருந்தவர்கள் வீடியோவும் எடுத்து, இணையத்தில் பதிவிட்டுவிட்டனர்..
இந்த வீடியோ வைரலான நிலையில், தாசில்தாரின் மானமே போய்விட்டது.. ஆனால், இதுகுறித்து ராமையா தரப்பில் சொல்லும்போது, ஏற்கனவே தாசில்தாரும், பெண் அதிகாரியம் ஒன்றாக பணியாற்றிபோது, நெருங்கி பழகி வந்தனர்.. உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.. ஆனால், தாசில்தாருக்கு திடீரென டிரான்ஸ்பர் வந்துவிட்டதால், அவர்களுக்குள்ளிருந்த நெருக்கம் குறைந்துவிட்டது..
பல கோணங்களில் விசாரணை
தாசில்தாரை வீட்டுக்கு வரவழைத்ததே அந்த பெண் அதிகாரிதான்.. ஆனால், அதற்குள் தன்னுடைய தாயை வரவழைத்து துடைப்பத்தால் அடிக்க வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இப்படி இரு தரப்பிலுமே வேறு வேறு மாதிரியாக சொல்லப்படுவதால், இதுகுறித்த விசாரணயை அனைத்து கோணங்களிலும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். எனினும், தாசில்தார் பெண் வீட்டுக்கு வந்த சம்பவமும், அவர் தாக்கப்பட்ட நிகழ்வும், வீடியோவாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications