தாலியை வாசற்படியில் தொங்கவிட்ட விதவை பெண்.. குமுறி குமுறி அழுது.. தாசில்தார் ஆபீசில் திடீர் பரபரப்பு
பெண் ஒருவர் தாலியை கழட்டி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
திருப்பதி: தாலியை எடுத்து, தாலுகா ஆபீசில் கட்டி தொங்கவிட்டு, ஓவென அழுது ஒப்பாரி வைத்துள்ளார் ஒரு விதவை பெண்.. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பதறிவிட்டனர்!
தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், மணலா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேசம்... இவரது மனைவி மங்கா.
ராஜேசம் ஒரு விவசாயி.. அவருக்கு அதே கிராமத்தில் 2 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது... ஆனால், கடந்த 3 வருஷங்களுக்கு முன்பு உடம்பு சரியில்லாமல் ராஜேசம் இறந்துவிட்டார்..

அதிர்ச்சி
இதனை அறிந்த தாசில்தார் அலுவலக ஊழியர்கள், ராஜேசம் நிலத்தை வேறு பெண்ணிற்கு மாற்றி பட்டா வழங்கி இருக்கிறார்கள்.. இந்த விஷயம் தெரிந்து அதிர்ந்து போனார் மங்கா.. அதனால், தன் கணவருக்கு சொந்தமான நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றி பட்டா வழங்க வேண்டும் என கேட்டு வந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

புலம்பல்
கணவன் இழந்த நிலையில், கஷ்டப்பட்டு வருகிறேன்.. 2 பிள்ளைகளையும் வளர்க்கவே கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.. இதில் எப்படி லஞ்சம் தர முடியும்.. மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியை செய்து தாருங்கள் என்று கேட்டுள்ளார்.. ஆனால், அதிகாரிகள் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்று கறாராக சொல்லிவிட்டனர்.

உதவி
இப்படியே 3 வருடமாக அலைந்து திரிந்து வந்துள்ளார்.. இதற்காக யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமலும் தவித்துள்ளார்.. தினமும் காலையில் தாசில்தார் ஆபீசுக்கு வந்து உட்கார்ந்துவிடுவாராம் மங்கா.. ஆனாலும் அதிகாரிகள் இவரை பொருட்படுத்துவதே இல்லையாம்.. சாயங்காலம் வரை உட்கார்ந்து உட்கார்ந்து பார்த்துவிட்டு சோகத்துடன் வீடு திரும்பி வந்துள்ளார். நேற்றும் அப்படித்தான் சென்றுள்ளார்.. லஞ்சம் தந்தால்தான் ஃபைல் நகரும் என்று சொல்லி உள்ளனர்..

பரபரப்பு
இதனால் மனவேதனையும் ஆத்திரமும், விரக்தியும் அடைந்த மங்கா, "இதோ என் கணவர் இறந்துவிட்ட நிலையில், இந்த தாலி மட்டும்தான் என்கிட்ட இருக்கு.. இதை நீங்களே வெச்சுக்குங்க.. இதை லஞ்சமாக வைத்து கொண்டாவது எங்க நிலத்திற்கான பட்டாவை மாற்றி குடுங்க" என்று அந்த தாலியை தாசில்தார் அலுவலக ஆபீசில் தொங்கவிட்டு கதறி அழுதார்.. அந்த ஆபீசின் நுழைவாயிலேயே இரும்பு கேட்டில் தாலி தொங்கி கொண்டிருந்தது.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications