Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உனக்கு 20, எனக்கு 42.. 20 வயது மூத்த மாப்பிள்ளைக்கு மணமேடையிலேயே புதுப்பெண் தந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: இன்றைக்கு திருமணம் என்பது இளைஞர்களுக்கு கனவாக மாறி வருகிறது. பல இளைஞர்கள் பல மாவட்டங்களில் பெண் கிடைக்காமல் 40 வயது வரையிலும் திருமணம் செய்யாமல் உள்ளார்கள். அதேநேரம் சில இளம் பெண்களை பணத்திற்காக அவர்களை விட மிக அதிக வயது வித்தியாசம் உள்ள ஆணுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அப்படித்தான் 20 வயது மூத்தவருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க ஆந்திராவில் பெற்றோர் முயன்றனர். இதனால் மணமேடையில் பெண் கதறி அழுதார். இறுதியில் அவருக்கு நல்ல விஷயம் நடந்தது.

1985 முதல் 1995 வரை பிறந்த 90ஸ் கிட்ஸ்களில் பலருக்கு 30 முதல் 40 வயது ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் திருமணம் நடைபெறாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பல சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அப்படியே பெண் குழந்தைகள் இருந்தாலும், நன்கு படித்த, சொந்த வீடு உள்ள, நல்ல வேலையில் உள்ள, லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஐடி ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தான் தருவதற்கு விரும்புகிறார்கள் பெற்றோர்கள்.

The twist given by the bride to the groom 20 years older than her at the wedding hall in Andhra

இதன் காரணமாக சராசரியாக படித்த, நிலையான வேலையில் இல்லாத, சொந்த வீடு இல்லாத, நல்ல சம்பளம் வாங்காதவர்கள் பெண் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அதேபோல் நன்றாக சம்பாதித்து செட்டில் ஆன பின்னர் திருமணம் செய்யலாம் என்று பெண் தேடினால் மாப்பிள்ளை வயது அதிகம் என்று நிராகரித்து விடுகிறார்கள்.

இந்த சிக்கல்கள் ஒருபுறம் எனில் , பணத்திற்காகவும், அந்தஸ்துக்காகவும் வயதானவருடன் இளம் பெண்களை திருமணம் செய்து வைப்பதும் நடக்கிறது. ஆந்திராவில் 20 வயது மூத்தவருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயன்றனர். இதனால் மணமேடையில் பெண் கதறி அழுதார். இறுதியில் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் அன்னவரம் என்ற இடத்தில் சத்திய நாராயண சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக மணமேடை அமைக்கப்பட்டு அதில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். இரு வீட்டாரின் உறவினர்களும் திருமணத்திற்காக வந்திருந்தனர்.மணமேடையில் அமர்ந்திருந்த மணப்பெண் திடீரென்று கதறி அழ தொடங்கினார்.

சிறிது நேரத்தில் மணமகன் அழைத்து வரப்பட்டார். தாலி கட்ட சில நிமிடங்களே இருந்த நிலையில் மணமகள் தொடர்ந்து அழுத வண்ணம் இருந்தார். அப்போது கோவிலுக்கு வந்த சில பக்தர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மணப்பெண் எனக்கு 20 வயது ஆகிறது.

ஆனால் என்னை விட 22 வயது அதிகம் உள்ளவருடன் எனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் என்னை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து விட்டனர் என்று கூறினார்கள். இதையடுத்து போலீசார் எச்சரித்ததால், திருமணம் பாதியில் நின்றது. இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+