பெருமாள் பக்தர்களுக்கு அலர்ட்.. திருப்பதியில் இன்று முதல் செப்டம்பர் வரை வருகிறது புதிய கட்டுப்பாடு
திருப்பதி: திருப்பதி மலைப் பாதையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இன்று முதல் நேரக் கட்டுப்பாடு விதித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு செப்டம்பர் மாதம் வரை கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் குட்டிகளை ஈனும் காலம் என்பதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் மலைப்பாதை படிக்கட்டுகள் வழியாக நடந்தும், மலைப்பாதை சாலை வழியாக வாகனங்களில் பயணித்தும் செல்கின்றனர். இந்நிலையில், திருப்பதி மலைப் பாதையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இன்று முதல் நேரக் கட்டுப்பாடு விதித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வனவிலங்குகளில் இனப்பெருக்க காலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் என்பதால் இரவு நேரங்களில் திருப்பதி மலைப் பாதையில் விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். வனவிலங்குகள் குட்டிகளுடன் வேட்டைக்குச் செல்வது, குட்டிகளை தூக்கிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடும். எனவே, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இருசக்கர வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திருப்பதி மலைப் பாதையில் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நாட்களில் காலை 6 மணிக்கு முன்னதாகவோ, இரவு 9 மணிக்குப் பின்னரோ இருசக்கர வாகனங்களில் திருப்பதி மலைப் பாதையில் பக்தர்கள் பயணிக்க அனுமதி இல்லை என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications