திருப்பதியில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டில் ரூ 65 ஆயிரம் முறைகேடு! சிக்கிய பெங்களூர் குடும்பம்
திருப்பதி: திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் ரூ 500 மதிப்பிலான விஐபி தரிசன டிக்கெட்டுகள், ஒய்எஸ்ஆர் ஆட்சியில் ரூ 65 ஆயிரத்திற்கு கள்ளச்சந்தையில் விற்று முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது.
திருப்பதியில் தற்போது தரிசனம் மற்றும் லட்டு முறைகேடுகளை தடுக்க தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ததுடன், இடைத்தரகர்களை கட்டுப்படுத்த ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு மட்டும் விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது.

லட்டு முறைகேட்டைத் தடுக்க ஏழுமலையானை தரிசித்துவிட்டு திரும்பும் அனைவருக்கும் இலவசமாக லட்டு வழங்கி, கூடுதல் லட்டு தேவைப்படுவோருக்கு கட்டுப்பாடு இல்லாமல் லட்டு வழங்கும் திட்டமும் அமலாகியுள்ளது. இதனால் தரிசன டிக்கெட் மற்றும் டிக்கெட் முறைகேட்டில் ஈடுபடும் இடைத்தரகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
அது போல் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெறும் பக்தர்கள் அனைவரையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்திய பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் விஐபி தரிசன டிக்கெட்டில் பெங்களூருவை சேர்ந்த சாய் குமார் குடும்பத்தினருடன் தரிசிக்க சென்றார்.
அப்போது அவர் வைத்திருக்கும் டிக்கெட்டில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை நடத்தியதில் ரூ 500 மதிப்பிலான விஐபி தரிசன டிக்கெட்டுளை 5ஐ, ரூ 65 ஆயிரத்திற்கு கள்ளச்சந்தையில் விற்று முறைகேடு செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர மேல் சபை துணைத் தலைவர் ஜாகியா கானம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அறையை வாடகைக்கு வாங்கித் தருவதாக கூறி போலி ஆசாமிகள் இணையதளத்தின் மீது பணம் பெற்று வருவது தெரியவந்துள்ளது. எனவே திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவிர பக்தர்கள் வேறு எதிலும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications