திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊழியர்களுக்கு பரவும் கொரோனா - சத்தான உணவு தர ஏற்பாடு

திருமலை திருப்பதியில் வேலை செய்யும் தேவஸ்தான ஊழியர்கள் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவில் பணியாளர்களுக்கு சத்தான உணவு கொடுக்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்

Google Oneindia Tamil News

திருப்பதி: திருமலை திருப்பதியில் வேலை செய்யும் தேவஸ்தான ஊழியர்கள் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு சத்தான உணவு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் காணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் கோவில் முடப்பட்டது ஜூன் 10ஆம் தேதி முதல் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சத்தையும் மீறி இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழு மலையானை தரிசனம் செய்துள்ளனர்.

Tirupati Balaji Temple 91Employees Test Positive For COVID-19

இந்த நிலையில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனில் நேற்று காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகள் கேட்கும் முகாம் நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பங்கேற்று பேசினார். அப்போது அவர், திருப்பதியில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஜூலை 10ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் தேவஸ்தான ஊழியர்கள் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொது தரிசனத்தில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். அன்று முதல் ஜூலை 10ஆம் தேதி வரைக்கும் ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் கேட்டு 2 லட்சத்து 2 ஆயிரத்து 346 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 742 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 55 ஆயிரத்து 669 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரவில்லை.

அதேபோல் ஆன்லைனில் பதிவு செய்யாமல் நேரில் வந்து 97 ஆயிரத்து 216 பக்தர்கள் இலவச தரிசனத்தில் வழிபட டைம் ஸ்லாட் டோக்கன் பெற்றுள்ளனர். அதில் 85 ஆயிரத்து 434 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில் 11 ஆயிரத்து 782 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரவில்லை.

உண்டியல் வருமானமாக ரூ.16 கோடியே 73 லட்சம் கிடைத்தது. 13 லட்சத்து 36 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கல்யாண கட்டாக்களில் 82 ஆயிரத்து 563 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தி உள்ளனர். காணிக்கை தலைமுடி இறக்கும் பணியில் 430 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 91 ஊழியர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பணிக்கு வரும் அனைத்து ஊழியர்களுக்கும் கேண்டீனில் சத்தான உணவு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்!!கொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்!!

Recommended Video

    Covaxin: Corona Vaccine ஆகஸ்ட் 15- ஆம் தேதி நடைமுறைக்கு வருமா? | Oneindia Tamil

    கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 7ஆம் தேதி வரைக்கும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை வழிபட செல்லும் பக்தர்களுக்கு வசதியாக தரிசன வரிசையின்மேல் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பணிக்கு வரும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் கோவிலுக்குள் நுழையும்போது, அவர்களின் கைகளில் சானிடைசர் தெளிக்கப்படுகிறது என்றும் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.

    English summary
    Corona tests are conducted for TTD employees at Tirumala, 91 of TTD employees at Tirumala are detected corona positive. A special menu is made available at employees' canteen for the sake of employees' health.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X