குக்கருடன் பிசினஸ்மேன் மனைவியை நெருங்கி வந்த சமையல்காரர்.. அங்கேயே குளித்து.. திகுதிகு திருப்பதி
திருப்பதி: 9 வருடமாக சமையல்காரராக வேலை செய்யும் ரோஷன் என்பவர், குடும்பத்தினரின் மொத்த நம்பிக்கையை பெற்றவர்.. இவரிடம் மற்றொரு சமையல்காரர் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.. 11 நாட்களுக்கு முன்பு, புதிய சமையல்காரர் வீட்டு வேலைக்கு வந்துள்ளார்.. இந்நிலையில், தொழிலதிபரின் வீட்டில் இப்படியொரு
கொடுமை நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை தெலுங்கானா போலீசார் நடத்தி வருகிறார்கள்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கூகட்பள்ளியில் ஸ்வான் லேக் கிரேடட் கம்யூனிட்டி அப்பார்ட்மென்ட் உள்ளது.. இதிலுள்ள ஒரு வீட்டில் ராகேஷ்அகர்வால் என்ற 55 வயது நபரும், 50 வயதான அவரது மனைவி ரேணுஅகர்வால் என்பவரும் வசித்து வந்தனர்.. தொழிலதிபர்களான இவர்களுக்கு 25 வயதில் சுபம் என்ற மகன் இருக்கிறார்.

தொழிலதிபர் மனைவி
ராகேஷ்அகர்வால் அதே பகுதியில் சில்வர் பாத்திரங்களை ஹோல்சேல் வியாபாரம் செய்யும் கடையை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். இந்த பாத்திர பிசினஸை, மகனும் சேர்ந்து கவனித்து வருகிறார்.
இதே அப்பார்ட்மென்ட்டில் இவர்களது சொந்தக்காரர்களும் வசித்து வருகிறார்கள்.. இவர்களது வீட்டில் கடந்த 9 வருடங்களாக ரோஷன் என்பவர் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஜார்க்கண்ட்டை சேர்ந்தவர் ஆவார்..
தங்கள் வீட்டுக்கும் ஒரு சமையல்காரர் வேண்டும் என்று ரோஷனிடம் ராகேஷ் கேட்டிருந்தார்.. எனவே, ஹர்ஷா என்பவரை கடந்த 11 நாட்களுக்கு முன்பு சமையல் வேலைக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டார் ரோஷன்..
11 நாள் சமையல்காரர்
கடந்த 11 நாட்களாகவே ராகேஷ் வீட்டில் ஹர்ஷா சமைத்து வருகிறார்.. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ராகேஷூம், அவரது மகன் சுபம் இருவரும் கடைக்கு சென்றுவிட்டார்கள்.. வியாபாரம் பிசியாக இருந்ததால் பகலில் வீட்டுக்கு போன் செய்து, ரேணுவிடம் பேசமுடியவிலலை.. இதனால், சாயங்காலம் 6 மணியளவில் ராகேஷ், தன்னுடைய வீட்டிற்கு போன் செய்து மனைவியிடம் பேச முயன்றுள்ளார்.
ஆனால், பலமுறை போன் செய்தும் ரேணு போன் எடுக்கவில்லை.. இதனால் பயந்துபோன ராகேஷ், உடனடியாக வீட்டுக்கு கிளம்பி வந்தார்.. அப்போது வீட்டின் கதவு உட்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.. இதனால் கதவை நீண்ட நேரமாக தட்டினார்.. அப்போதும் கதவு திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
டேபிளில் சாப்பாட்டு குக்கர்
அப்போது மனைவி ரேணு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.. கதறி அழுதார்... ரேணுவின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.. அவரது தலையில் பலமாக அடிபட்டிருந்தது.. உடம்பெல்லாம் கத்தியால் குத்தப்பட்டிருந்தது.. டேபிள் மீது ரத்தக்கறை படிந்த குக்கர் இருந்தது.. ஆனால், புதிதாக வேலைக்கு சேர்ந்த ஹர்ஷாவை வீட்டில் காணவில்லை.
உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தந்தார் ராகேஷ்.. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்... அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.. இறுதியில் அதில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணையும் ஆரம்பமானது.. அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
குக்கரில் கறை - பாத்ரூமில் குளியல்
அதாவது அதே அப்பார்ட்மென்ட்டில் உறவினர் வீட்டில் வேலை செய்யும் ரோஷனும், ஹர்ஷாவும் சேர்ந்து, இந்த கொடுமையை செய்தது தெரியவந்துள்ளது.. இருவரும் வீட்டிற்குள் புகுந்து ரேணு அகர்வாலிடம் நகை, பணம் எங்கே என்று கேட்டு மிரட்டியிருக்கிறார்கள்.. இதற்கு ரேணு பதில் சொல்லவில்லை.. இதனால் ஆத்திரமடைந்த 2 சமையல்காரர்களும் சேர்ந்து ரேணுவை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பிறகு கை, கால்களை கட்டிப்போட்டு, கிச்சனிலிருந்து குக்கரை எடுத்து வந்து ரேணுவின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். அத்துடன் கூர்மையான கத்தியாலும் பல இடங்களில் ரேணு உடம்பில் குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரேணு உயிரிழந்துள்ளார்.. பிறகு ரத்தக்கறை படிந்த தங்களது டிரஸ்களை அங்கேயே கழற்றி போட்டுவிட்டு பாத்ரூமுக்கு சென்று குளித்துள்ளனர்.
2 சமையல்காரர்கள் எங்கே
பிறகு ரேணுவின் மகன் சுபத்தின் டிரஸ்களை அணிந்து கொண்டு, வீட்டிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு லிப்ட் வழியாக தப்பிச்சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.. ஆனால், சமையல்காரர்கள் 2 பேருமே காணவில்லை..
இதனால் அவர்களை தேடி வருகின்றனர். இதைத்தவிர 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.. தனிப்படை போலீசாரும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.. தொழிலதிபரின் மனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications