திருமலை தேவஸ்தான லட்டு டேஸ்ட் மாறப்போகிறதா? திருப்பதி டெண்டரில் "நந்தினி" இல்லை.. என்னாச்சு?
திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படும் லட்டுக்களில் இனி பெருத்த மாற்றம் இருக்கும் என தெரிகிறது.. இதுகுறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் என்றாலே, தேவஸ்தானத்தின் பிரசாதமான லட்டுதான் நினைவுக்கு வரும்.. தேவஸ்தானத்தின் சார்பில் பிரத்யேகமாக இதற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கவுன்டர்களில், அதிக அளவில் லட்டுகளை பக்தர்கள் வாங்கி செல்கிறார்கள்.
அதனால்தான், லட்டு சமாச்சாரத்தில் நிறைய மாற்றங்களை தேவஸ்தானம் அடிக்கடி செய்து வருகிறது.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, லட்டு விற்பனையில் சில அதிரடியை அறிவித்திருந்தது.

அதாவது வழக்கமாக, இந்த லட்டுகள் பிளாஸ்டிக் மற்றும் துணி பைகளில்தான் வழங்கப்படுகின்றன.. ஆனால், பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் மாசு பிரச்சனை வருவதால், இனிமேல் பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என்பதுடன், லட்டுகளை கொண்டு செல்ல, இனிமேல் பனை ஓலைப்பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல முடிவையும் தேவஸ்தானம் எடுத்திருந்தது.
பனைஓலைகள்: 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் என்று 3 விதமான சைஸ்களில் பனை ஓலைப்பெட்டிகள் கவுன்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும், இதனால், சுற்றுச்சூழல் ஆரோக்கியம் பெருகுவதுடன், கிராமப்புற மக்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தேவஸ்தானம் முடிவெடுத்தது.
நம்ம தமிழ்நாட்டிலும்கூட, பனைத்தொழிலை நம்பியே கிட்டத்தட்ட 10 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன.. பனை ஓலைகளில் கொழுக்கட்டை செய்யும் பழக்கம் நம்ம ஊர்களில் இன்றும் உள்ளதால், தேவஸ்தானம் போலவே, தமிழ்நாட்டு அரசும் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே விருப்பமாகவும் எழுந்துள்ளதை மறுக்க முடியாது.
தேவஸ்தானம்: இந்நிலையில், திருப்பதி லட்டு சம்பந்தமாக இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதாவது, திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட, கர்நாடகாவின் நந்தினி நெய்யின் வினியோகமானது நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தானத்தில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்துக்கு, கர்நாடக பால் கூட்டமைப்புக்கு சொந்தமான நந்தினி நெய் மட்டுமே இதுநாள் வரை பயன்படுத்தப்பட்டு வந்தது... அந்தவகையில், கடந்த 20 வருடங்களாகவே, நந்தினி நெய்யில் தான் லட்டு தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் லட்டுக்கு, நந்தினி நெய் வினியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து கேஎம்எப் என்ற கர்நாடக மில்க் ஃபெடரேஷன் தலைவர் பீமா நாயக் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.
20 வருடங்கள்: அதில், 20 வருடங்களாக திருப்பதி லட்டு தயாரிக்க, நந்தினி நெய் பயன்படுத்தப்பட்டது.. தள்ளுபடி விலையில் நெய் வினியோகம் செய்யப்பட்டுவந்தது. ஆனால், பால் விலை திடீரென உயர்ந்துவிட்டதால், பாலின் துணை பொருட்களின் விலையை உயர்த்துவது, தவிர்க்க முடியாததாகிவிட்டது.

எனவே, தள்ளுபடி விலையில், திருப்பதிக்கு நெய் விற்க முடியவில்லை.. திருமலை - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் எங்கள் நிலைமையை எடுத்து சொன்னோம்.. எனினும், அவர்கள் தள்ளுபடி விலையில், நெய் வாங்கவே ஆர்வமும், விருப்பமும் காட்டுகிறார்கள்.. எங்களின் நெய்யில் உயர்ந்த தரத்தை கடைப்பிடித்துவரும்போது, இது எங்களுக்கு சாத்தியமில்லை..
அதிர்ச்சி: எனவே, தேவஸ்தானத்துடனான டெண்டரை நிறுத்திவிட்டோம்.. ஏலத்திலும் பங்கேற்க முடியாது.. நெய் வினியோகமும் நிறுத்தப்பட உள்ளது.. எங்களால் குறைந்த விலையிலும் நெய் வழங்க முடியாது.. காரணம், நந்தினி நெய்யை பொறுத்தவரை, தரத்தில் எந்த ஒரு குறையும் இல்லை" என்றார். இந்த அறிவிப்பானது, தேவஸ்தான பக்தர்களிடம் பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications