திருப்பதிக்கு போறீங்களா? பெருமாள் பக்தர்களுக்கு ஹேப்பி! ஜனவரி சேவைக்கான ரிசர்வேஷன்! தேவஸ்தானம் செம
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள் கணக்கில் காத்திருக்காமல் ஒரே நாளில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி விட முடியும். அந்த அளவுக்கு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது தேவஸ்தானம்.. இந்நிலையில், திருமலை கோவிலில் ஜனவரி சேவைகளுக்கு முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலையும் தேவஸ்தானம் வெளியிட்டிருக்கிறது.
திருமலை திருப்பதி என்றாலே நினைவுக்கு வருவது ஏழு மலைகள்தான்... நாட்டின் பணக்கார கோயில்களில் முதலிடத்தில் இருப்பதும் திருப்பதிதான்..

மலைகளை மையமாக்கி பெருமாள் இருப்பதால் இவருக்கு மலையப்பர், ஏழுமலையான், மலை குனிய நின்றான் போன்ற சிறப்பு பெயர்களும் உண்டு.
திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி மலையின் ஒவ்வொரு மலைக்கும் ஆன்மீகத்தையும் இயற்கை அழகையும் இணைக்கும் திருப்பதி மலைகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு புகலிடமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதன்காரணமாக, பல ஏராளமான அரியவகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தாயகமாக இந்த மலை உள்ளது.. அத்துடன், காலநிலை பன்முகத்தன்மை கொண்டது. இவ்வளவு சிறப்பு வாய்ந்ததால்தான், திருப்பதி 7 மலைகளுக்கு உலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. உலக பாரம்பரிய அங்கீகாரத்திற்காக யுனெஸ்கோவால் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து நாள்தோறும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாகும்.. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது..
குறிப்பாக ஏழுமலையான தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் அன்னதான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், டிக்கெட் பெற்று விட்டு, ஏழுமலையான் தரிசனத்திற்காக நாள் கணக்கில் காத்திருக்கும் பக்தர்களின் சிரமங்களை குறைப்பதற்காக, காலையில் டிக்கெட் பெற்று, அன்று மாலையே தரிசனம் செய்து விட்டு, அதாவது ஒரே நாளில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. இதன் காரணமாக, ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கக் கூட தயங்குவதில்லை.
உண்டியல் காணிக்கை
நேற்று முன்தினம் அதாவது அக்டோபர் 20ம் தேதி கிட்டத்தட்ட 72,026 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கிறார்கள். 23,304 பேர் மொட்டை அடித்து சென்றுள்ளார்கள்.. நேற்று முன்தினம் ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 3.86 கோடியாக எகிறியிருக்கிறது.
சர்வ தரிசனத்தில் சுவாமி தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தார்கள்.. . 300 சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தார்கள்.. நடைபாதையாக வந்த பக்தர்கள் 10 மணிநேரம் காத்திருந்துவிட்டு தரிசனம் செய்தார்கள்.. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்துள்ளார்கள்.
பெருமாள் கோவில்
இந்நிலையில், திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் நடக்க உள்ளன.. இவைகளில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த அறிவிப்பில் "கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு, நாளை காலை 10:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.
மாற்றுத் திறனாளிகள்
ஆன்லைன் வாயிலாக தரிசிக்கும் கல்யாண உத்சவம், ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு, நாளை மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு, நாளை மறுநாள் மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது.
ஜனவரி மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு, வரும், 25ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. அன்று மாலை 3:00 மணிக்கு, திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவு துவங்குகிறது.
திருச்சானுார், பத்மாவதி தாயார் கோவிலில், நவ., மாதத்திற்கான சிறப்பு தரிசனம், 200 ரூபாய்க்கான முன்பதிவு, 25ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது" என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications