Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி பயணத்தை ரத்து செய்த ஜெகன்மோகன் ரெட்டி.. இறை படிவத்தில் கையெழுத்திட கூறியதால் கடும் கோபம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதில் கோவில் செல்லும் பயணத்தை ஆந்திர முன்னள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திடீரென்று இன்று ரத்து செய்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால் இறை நம்பிக்கை படிவத்தில் கையெழுத்திட்டு தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் அவர் இந்த பயணத்தை திடீரென்று ரத்து செய்துள்ளார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி செயல்பட்டு வந்தார். அதன்பிறகு கடந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது.

tirupati laddu andhra pradesh jaganmohan reddy

தெலுங்கு தேசம் + ஜனசேனா + பாஜக கட்சியின் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வரானார். ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வரானார்.

இதையடுத்து சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பை கலந்து ஜெகன்மோகன் ரெட்டி கலந்து புனிதத்தை கெடுத்துவிட்டதாக தெரிவித்தார். இதனை ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது கட்சி முற்றிலுமாக மறுத்தது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட ஆய்வக அறிக்கையில் திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றி கொழுப்பு உள்ளிட்டவை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமானது. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பவன் கல்யாண் 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ளார். அதுமட்டுமின்றி கோவிலின் பரிகார பூஜை, வாஸ்து ஹோமம் மேற்கொள்ளப்பட்டது. ஹோமத்தில் வைக்கப்பட்ட புனிதநீர் மூலவர் சன்னதி, லட்டு தயாரிப்பு கூடம், அன்னப்பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி, லட்டு கவுண்டர்கள், கோயில் வளாகத்தில் தெளிக்கப்பட்டன.

இது ஒருபுறம் இருக்க ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். அதுமட்டுமின்றி லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் போலியான தகவல்களை பரப்பும் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தைப் போக்க ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் ஆகஸ்ட் 28ம் தேதி சிறப்பு பூஜை நடத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.

அதோடு செப்டம்பர் 28 ம் தேதி திருப்பதி கோவிலுக்கு தான் சென்று சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்க பரிகார பூஜை நடத்துவதாக அறிவித்தார். இதையடுத்து இன்று ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தாடிப்பள்ளியில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி செல்ல தயாரான நிலையில் திடீரென்று அந்த பயணத்தை ரத்து செய்தார்.

திருப்பதி செல்லும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர். திருப்பதி கோவிலில் மாற்று மதத்தினர் செல்லும்போது இறை நம்பிக்கை தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. மேலும் அவரது பாதுகாப்பு விவகாரத்தில் சந்தேகம் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் திருப்பதி பயணத்தை கடைசி நேரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ரத்து செய்துள்ளார். இது தற்போது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+