திருமலை திருப்பதியில் திகைத்த பக்தர்கள்.. பெருமாளுக்கு காணிக்கையில் தித்திப்பு சர்ப்ரைஸ் பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: பணக்கார சாமி என்று சொல்லப்படும் திருமலையில் வெங்கடாசலபதியை தரிசிக்க வரும் கோடிக்கணக்கான பக்தர்கள், தங்களின் வேண்டுதல் நிறைவேறிய நன்றிக்காக உண்டியலில் காணிக்கைகளை செலுத்துவார்கள்.. அந்தவகையில் நேற்று முன்தினம் திருப்பதி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகையை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி கோயிலில் செலுத்தப்படும் காணிக்கையானது, வழிபாட்டையும் தாண்டி, சமூக சேவை, அன்னதானம், கோயில் பராமரிப்பு, இயற்கை பாதுகாப்பு என பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

Tirupati Temple Tirumala Donations

திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல், வராகஸ்வாமி கோயில், கோவிந்தராஜ ஸ்வாமி கோயில், சீனிவாசமங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் உள்ளிட்ட பல முக்கிய ஆலயங்கள், திருப்பதி தேவஸ்தானத்தின் நிதியில்தான் பராமரிக்கப்படுகின்றன. திருமலையை சுற்றியுள்ள சிறிய கோயில்களுக்கும் தேவஸ்தானம் நிதியுதவி வழங்கி வருகிறது.

பணக்கார கடவுள்

பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள், பக்தர்களுக்கான வசதிகளுக்கே முதன்மையாக செலவிடப்படுகின்றன..

திருமலையில் உள்ள 7000-க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள், இலவச லாக்கர்கள், குடிநீர், குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் தேவஸ்தான நிதியில்தான் பராமரிக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் எந்த சிரமமும் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்..

உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு, தேவஸ்தானத்தின் முக்கிய வருமானத்திலும், அடையாளத்திலும் ஒன்று. இந்த லட்டுவுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது... காஸ்ட்லி பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் லட்டு, பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுவதோடு, பல நேரங்களில் இலவச பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

அதேபோல திருமலையில் அன்னதான மரபு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது.. இன்று, தினமும் 60,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த அன்னதான திட்டம் முழுமையாக பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளின் மூலமே செயல்படுகிறது.

நன்கொடைகள் - முதலீடு - நிரந்தர சேவை

அதேபோல அன்னதானம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்பதற்காக, பெறப்படும் நன்கொடைகள் தேசிய வங்கிகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அதிலிருந்து கிடைக்கும் வட்டி, சேவைத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

சபாஷ் பணிகள் - உண்டியல் பணம்

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ வெங்கடேசுவரா உயிரியல் பூங்கா, ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய உயிரியல் பூங்காவாக உள்ளது. அரிய விலங்குகள், தாவரங்கள், பசுமை வளங்கள் பாதுகாக்கப்படுவதற்கும் தேவஸ்தான நிதி பயன்படுத்தப்படுகிறது.

திருப்பதியில் உண்டியலில் விழும் ஒவ்வொரு ரூபாயும், இறைவழிபாட்டுடன் சேர்த்து, உணவு, தங்குமிடம், கோயில் பராமரிப்பு, இயற்கை பாதுகாப்பு, சமூக சேவை என பல துறைகளில் பயன்படுகிறது. அதனால்தான், திருப்பதி தேவஸ்தானம் உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிர்வாக அமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. அதனால்தான் திருப்பதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

டபுள் சர்ப்ரைஸ்

நேற்றைய தினமும் திருப்பதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து, ஏழுமலையானை வழிபட்டுச் சென்றனர்.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 73 ஆயிரத்து 788 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அதாவது 23 ஆயிரத்து 449 பேர் முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்களாம்.. அன்று ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 65 லட்சம் கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+