திருப்பதி தேவஸ்தான அதிகாரி ராஜசேகர் பாபு.. சொந்த ஊரில் தேவாலயத்தில் வழிபாடு.. உடனே பணியிடை நீக்கம்
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான உதவி செயல் அலுவலராக பணியாற்றியவர் ஏ.ராஜசேகர் பாபு என்பவர் திருப்பதி மாவட்டம் புத்தூர் நகரில் உள்ள தேவாலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வழிபாடுகளில் கலந்து கொள்வதாக தேவஸ்தான நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இந்து அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை இந்த செயல் மீறியதாக கருதப்பட்டது. இதையடுத்து திருப்பதி தேவஸ்தான உதவி செயல் அலுவலர் ஏ.ராஜசேகர் பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான உதவி செயல் அலுவலராக ராஜசேகர் பாபு என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் என்பது திருப்பதி மாவட்டத்திலுள்ள புத்தூர் ஆகும். இந்நிலையல் தேவஸ்தான அதிகாரி ராஜசேகர் பாபு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பகுதிகள் பரவலாக பேசத்தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான உதவி செயல் அலுவலர் ராஜசேகர் பாபு, புத்தூரில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைகளில் கலந்து கொண்ட தகவல் ஒரு கட்டத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமையகத்தின் கவனத்திற்கு சென்றது. இந்து கோவிலில் பணியாற்றும் அதிகாரி எப்படி தேவாலயத்திற்குச் சென்று வழிபாடு நடத்தலாம் என்று சமூக வலைதளங்களில் சிலர் கேள்விகளை எழுப்பினார்கள்.
இதையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானது. இந்த நிலையில்தான், திருமலை திருப்பதி தேவஸ்தான உதவி செயல் அலுவலர் ராஜசேகர் பாபுவின் இந்தச் செயல் இந்து அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை நேரடியாக மீறியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து திருமலை திருப்பதி வேதஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பின் படி, ராஜசேகர் பாபு தனது சொந்த ஊரான புத்தூரில் உள்ள உள்ளூர் தேவாலய பிரார்த்தனைகளில் தவறாமல் கலந்துகொள்வது எங்களுடைய கவனத்திற்கு வந்தது.
அவரின் இத்தகைய நடத்தை தேவஸ்தான விதிமுறைகளை மீறும் செயல் ஆகும். ஒரு இந்து மத அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நடத்தை விதிகளை அவர் பின்பற்றத் தவறிவிட்டார். பொறுப்பற்ற முறையில் செயல்பட்டார். இந்த விவகாரத்தில், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையின் அறிக்கை மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னர் அவர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications