திருமலை திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து! தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளை தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். எனவே திருப்பதி ஏழுமலையான் கோயில் எப்போதுமே கூட்டம் நிறைந்து காணப்படும்.

திருப்பதி ஏழுமலையானை ரூ 300 சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை தரிசனம், ஆர்ஜித சேவைகள், இலவச தரிசனம் உள்ளிட்டவை மூலம் தரிசிக்கலாம். இந்த நிலையில் பண்டிகை காலங்களில் சாதாரண பக்தர்களும் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பதற்காக விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படும்.
நாளை தெலுங்கு வருட பிறப்பையொட்டி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இதனால் இன்று முதலே அதற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது. விஐபி பிரேக் தரிசனத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு உயரதிகாரிகளின் சிபாரிசு கடிதங்களுடன் தினமும் 4000 தரிசனம் செய்கிறார்கள்.
இவர்களுக்கென தனி வரிசை, தனி நேரம் இருக்கிறது. எனினும் இலவச தரிசனத்திற்கு செல்லும் மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல் எழுகிறது. அதிலும் முக்கியமான பண்டிகை காலங்களில் இந்த காத்திருப்பு நேரம் என்பது அதிகரிக்கிறது. இதை கருத்தில் கொண்டுதான் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
அந்த வகையில் தற்போது கோடை காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாதலால் திருப்பதிக்கு ஏராளமானோர் வருகை தருவர். பொதுவாக கடந்த காலங்களில் இலவச தரிசனத்தில் காத்திருப்பு நேரம் 30 மணி நேரங்கள் என்றெல்லாம் ஆகியிருந்தது. இதனால் பக்தர்கள் அவதியடைந்தனர். குழந்தைகள், பெரியவர்கள், உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டனர்.
எனவே இந்த முறை விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதிவரை 3 மாதங்களளுக்கு விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே விஐபி பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் மார்ச் 31 ஆம் தேதி முதலே ஏற்கப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications