அனுமன் பிறந்த ஊர் இடம் எது?.. ஆதாரங்களுடன் நிரூபித்த திருமலை திருப்பதி தேவஸ்தானம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலையில் அஞ்சனாத்ரி மலையில்தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ராமநவமி விழா நடந்தது. அதையொட்டி திருமலையில் உள்ள அஞ்சனாத்ரிமலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே அறிவித்தது.

அதன்படி நேற்று திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.

திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி தேவஸ்தானம்

அதன் புத்தக பிரதியை திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி வெளியிட்டார். அதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெற்றுக் கொண்டார். அப்போது பன்வாரிலால் கூறுகையில் ஆஞ்சநேயரின் பிறப்பிடமாக அஞ்சனாத்ரி இருந்தது என புராணங்களின் வாயிலாக தேவஸ்தானம் நிரூபித்துள்ளது.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

அது போல் புவியியல் ஆதாரங்களும் அதையேதான் கூறுகின்றன. இதுகுறித்து அறிஞர்கள் குழு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தயாரித்த அறிக்கை ராமநவமி தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ராமரின் பிறப்பிடம் அயோத்தி ஆகும்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அவரின் பக்தனான அனுமனின் பிறப்பிடம் திருமலை அஞ்சனாத்ரி ஆகும். ஆஞ்சநேயரின் பிறப்பிடத்தை திருப்பதி தேவஸ்தானம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. நான் அனுமனின் பக்தன், அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். அனுமனின் ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து சேகரிப்பது எவ்வளவு கடினம் நான் நன்கு அறிவேன்.

4 மாதங்கள்

4 மாதங்கள்

அனுமனின் பிறப்பிடம் குறித்து ஆராய 4 மாதங்கள் அயராது உழைத்த அறிஞர்கள் குழுவுக்கு எனது வாழ்த்துகள் என ஆளுநர் தெரிவித்தார். இதுகுறித்து தேவஸ்தான செயல் அலுவலர் கே எஸ் ஜவஹர்ரெட்டி கூறுகையில் அனுமனின் பிறப்பிடம் திருமலையில் உள்ள அஞ்னாத்ரி என்பது ராமநவமியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஹம்பி ஷேத்திரம்

ஹம்பி ஷேத்திரம்

இந்த ஆதாரங்கள் விரைவில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மிக விரைவில் புத்தக வடிவிலும் கொண்டு வரப்படும். கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள ஹம்பி ஷேத்திரம் அனுமனின் பிறப்பிடம் என கறப்படுகிறது. மேலும் கிஷ்கிந்தா என்றும் அழைக்கப்படுகிறது.

ஆதாரம் இல்லை

ஆதாரம் இல்லை

அங்கு அனுமதி ஒரு ராஜ்ஜியத்தை நடத்தியிருக்கலாம். அனுமன் அஞ்சனாத்ரி மலையிலிருந்து அங்குச் சென்று சுக்ரீவனுக்கு உதவியிருக்கலாம் என அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டது. அனுமன் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அஞ்சனாத்ரியில் ஒரு கோயில் கட்டப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+