VIROSH: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா தம்பதி!
திருப்பதி: நடிகர் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்கு திருமணமான நிலையில் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அப்போது ரசிகர்களை பார்த்து கையசைத்தனர்.
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் கடந்த 26 ஆம் தேதி உதய்ப்பூரில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி சமூகவலைதளங்களில் பல லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

இவர்களுக்கு காலையில் தெலுங்கு முறைபடியும், மாலை கொடவா முறைப்படியும் திருமணம் நடந்தது. இவர் கர்நாடகாவின் கூர்கை சேர்ந்தவர். அங்கு கொடவா முறைப்படி திருமணம் நடக்கும். அதனால் அதை பின்பற்றி ராஷ்மிகாவுக்கு திருமணம் நடந்தது.
இவர்கள் இருவரும் ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள மாளிகையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த மாளிகைக்கு ஒரு நாள் வாடகை ரூ 1 லட்சத்திற்கு மேல் என சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே மருமகள் ராஷ்மிகாவுக்கு விஜய்யின் தாய் மாதவி, பாரம்பரிய தங்க வளையல்களை வழங்கினார்.
உதய்பூரில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. இந்த திருமணத்தில் திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை. அதனால் திரையுலக நண்பர்கள், அரசியல் பிரமுகர்களுக்காக மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் ரிசெப்சன் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அது போல் திருமண விழாவிற்கு ராஷ்மிகா டோலியில் வரும் காட்சிகளும் விஜய் தேவரகொண்டா வாள் ஏந்தியபடி இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் புதுமணத்தம்பதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications