தீபாவளி அன்று திருப்பதிக்கு போறீங்களா? தரிசன ரத்து குறித்து தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதியில் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் முடிந்து தற்போது ஐப்பசி மாத உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. தீபாவளி அன்று நடத்தப்படும் சிறப்பு உற்சவங்களுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

அக்டோபர் மாதம் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் உள்ளது. இதனால் நவம்பர் மாத உற்சவங்களுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தீபாவளி அன்று தீபாவளி அஸ்தனம் நடைபெறவுள்ளது.
இதனால் வழக்கமாக வியாழக்கிழமைகளில் நடத்தப்படும் திருப்பாவாடை உற்சவம் ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. தீபாவளி அஸ்தனம் காலை 7 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் அன்றைய தினம் ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே தேவஸ்தானம் அறிவித்துவிட்டது.
தீபாவளி பண்டிகை அன்று மாலை 5 மணியளவில் சகஸ்ர தீப அலங்கார சேவை நடத்தப்படவுள்ளதாகவும் இது நிறைவடைந்த பிறகு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அக்டோபர் 31 ஆம் தேதி விஐபி தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீபாவளிக்கு முந்தைய நாள் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் சுவாமி தரிசனம் மற்றும் தங்கும் இடம் போன்றவைகளுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது. இவற்றை நினைவில் வைத்துக் கொண்டு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
புரட்டாசி மாதம் முடிந்தாலும் திருப்பதியில் கூட்டம் ஓய்ந்த பாடில்லை. தினந்தோறும் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். அது போல் உண்டியல் காணிக்கையும் ரூ 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை வசூலாகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications