Viral Video: பென்ஷனை தர போறியா இல்லையா... தந்தையின் கழுத்தை நெறித்த கொடூரன்!
பெற்ற தந்தையின் கழுத்தை நெறித்த மகனின் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
திருப்பதி: "வாங்கின பென்ஷன் பணத்தை தரப்போறியா இல்லையா" என்று கேட்டு வயதான தந்தையை போதையில் மகன் கழுத்தை நெறிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் சந்திர்லபாடு கிராமத்தை சேர்ந்தவர் மெஹபூப் சாஹிப். இவருக்கு 70 வயது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இவருடைய மகன் ஷேக் ஷீலாத். இந்த இளைஞர் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.. அடிமையானவரும்கூட. அரசு வழங்கும் முதியோர் உதவி தொகையை சாஹிப் பெற்று வருகிறார்.

பென்ஷன் பணம்
இந்த மாதமும் இப்பணத்தை பெற்றுள்ளார். ஆனால் இந்த பணத்தில் 2,250 ரூபாய் தரவேண்டும் என்று மகன் அப்பாவிடடம் கேட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் பணத்தை கொடுத்தால், அதையும் குடித்து வீணாக்கி விடுவார் என்பதால் தர மறுத்துள்ளார்.

கதறி அழுதார்
இதனால் ஆத்திரம் அடைந்த மகன், பணத்தை கொடுக்க மறுத்ததால் பெற்ற அப்பா என்றும் பார்க்காமல், வயசானவர் என்றும் பார்க்காமல், அவரது கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தார். இதனை பக்கத்திலேயே இருந்து பார்த்த வயதான தாய், கதறி அழுகிறார்.

உயிரிழந்தார்
அவரை எதுவும் செஞ்சிடாதே.. விட்டுவிடு என்று மகனிடம் கெஞ்சுகிறார். போதை மண்டைக்கேறிய மகனின் பிடியில் வயதானவர் சிக்கி போனார். இதில் காயமடைந்து மயக்கமடைந்து விழுந்துவிட்டார். அவரை அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனாலும் வயதான மெஹபூப் சாஹிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

வீடியோ
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தனது தந்தை மீது அண்ணன் நடத்திய தாக்குதலை தங்கை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இல்லையென்றால் வீட்டிற்குள் நாலுசுவற்றுக்குள் நடந்த இந்த விஷயம் வெளி உலகுக்கு வந்திருக்காது.

கைது
எடுத்த வீடியோவை அருகில் உள்ள சந்திரல்லபாடு போலீஸ் ஸ்டேஷனிலும் கொண்டு போய் ஒப்படைத்துவிட்டார். இந்த தகவல், மற்றும் ஆதாரத்தின்பேரில் ஷேக் ஷீலாத்தை போலீசார் கைது செய்துள்ளனர். தந்தையை மகன் கழுத்தை நெறிக்கும் இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications