ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார். வடமாநிலங்களில் பிரச்சாரம் செய்த அவர் தற்போது தென்னிந்தியாவில் பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளார்.

When the Congress comes to power, We will give special status to Andhra says, Rahul Gandhi

முதலாவதாக ஆந்திர பிரதேச சென்ற ராகுல் காந்தி, அங்கு திருப்பத்தில் வழிபாடு செய்தார். மேல் திருப்பதிக்கு நடந்தே சென்ற அவர் கோவிலில் வழிபாடு செய்த பின் பிரச்சாரம் செய்ய தொடங்கினார்.

திருப்பதியில் பிரச்சாரத்தில் பேசிய அவர், பாஜக மீது சரமாரி புகார்களை அடுக்கினார். அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

மோடியின் வாக்குறுதிகளை மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள். மோடி ஆந்திர மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார்.

ஆனால் காங்கிரஸ் அப்படி இருக்காது. ஆந்திரா தொடங்கி அனைத்து மாநிலங்களுக்கும் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும். ஆந்திர மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+