தலையணையை கணவர் முகத்தில் அழுத்தி.. தூக்கத்திலேயே உயிர்போச்சு.. ஒப்பாரி வைத்த சுகன்யா.. அள்ளிய போலீஸ்

ஹைதராபாத்தில் கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: தலைகாணியை முகத்தில் வைத்து அமுக்கி கணவனை கொன்றதுடன், "தூக்கத்திலேயே உயிர்போயிடுச்சு" என்று கூவி கூவி ஒப்பாரியும் வைத்த சுகன்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் ஆண்டாள் நகர் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்த நபரை யாரோ கொன்றுவிட்டார்கள் என போலீசாருக்கு தகவல் பறந்தது. அதனால் போலீசாரும் விரைந்து சென்று விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சென்னைவாசி என்றே தெரியவந்தது.

அவர் பெயர் பிரபாகரன் என்கிற கிறிஸ்டி.. 50 வயதாகிறது.. மனைவி பெயர் சுகன்யா.. 3 குழந்தைகள் உள்ளனர்.. இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர்கள்.. அப்பாவி மக்களின் பணத்தை சுருட்டியதால், 2012ல் பிரபாகரனும் கைது செய்யப்பட்டார்.

கைது

கைது

அதேபோல, 2013ம் ஆண்டில், இதே வழக்கில், பிரபாகரனின் மனைவி சுகன்யாவையும் சிஐடி போலீசார் கைதுசெய்து ஜெயிலில் அடைத்தனர்.. தாய்-தகப்பன் 2 பேருமே ஜெயிலுக்கு போய்விட்டதால், அந்த 3 குழந்தைகளும் தாய், தந்தையின் பெற்றோருடன் சென்னையில் தங்கி வசித்து வந்தனர். 8 மாசம் ஜெயிலில் இருந்தவர், பிறகு ஜாமீனில் விடுதலையானார்.

 பக்கவாதம்

பக்கவாதம்

இங்கிருக்க பிடிக்காமல் ஹைதராபாத்துக்கு போய்விட்டார்.. அங்கு போனதுமே அவருக்கு பக்கவாதம் வந்துவிட்டது.. அதனால் சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார். இந்நிலையில், சுகன்யாவும், 2018ல் ஜாமீனில் வெளியே வந்தார்.. ஆனால் பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்று அவருக்கு தெரியவில்லை.. அதனால், பிள்ளைகளை அழைத்து கொண்டு, சித்தூரில் வீடு எடுத்து தங்கினார்.

தகராறு

தகராறு

பிறகுதான் பிரபாகரன் ஹைதராபாத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு, கடந்த, 18ம் தேதி கணவரின் வீட்டுக்கு வந்தார். திடீரென சுகன்யாவை பார்த்ததும் பிரபாகரன் ஷாக் ஆனார்.. சென்னைக்கே கிளம்பி செல்லுமாறு சொன்னார்.. அதற்கு சுகன்யா மறுக்கவும், தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.. அதனால் கடந்த 23ம் தேதி இரவு, பிரபாகரன் தூங்கி கொண்டிருந்த போது, தலைகாணியை, அவரது முகத்தில் வைத்து அழுத்தி கொன்றுவிட்டார்

 விடிகாலை

விடிகாலை

விடிகாலை நேரத்தில், "தூக்கத்திலேயே உயிர்போயிடுச்சு" என்று ஒப்பாரியும் வைத்துள்ளார்.. இதற்கு பிறகுதான் அந்த பகுதிமக்கள் சந்தேகித்து போலீசாருக்கு தகவல் சொல்லி உள்ளனர். இவ்வளவும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, சுகன்யா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது திரும்பவும் அந்த குழந்தைகள் அனாதைகளாக நின்று கொண்டிருக்கின்றன!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+