தாராபுரத்தில் ஷாக்.. தனியார் பள்ளியில் 15 மாணவர்களுக்கு கொரோனா.. கட்டுப்பாடுகளை மீறி எப்படி பரவியது?
திருப்பூர்: தாராபுரத்தில் தனியார் பள்ளியில் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பள்ளிக்கு ஒரு வாரம் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சளி மற்றும் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தினசரி கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

கொரோனா பரிசோதனை
அதே போன்று அரசு மருத்துவமனை சுகாதார துறையினரும் வட்டார மருத்துவர் தேன்மொழி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ், நவீன் மற்றும் மருத்துவ குழுவினர் அலங்கியம், பொன்னாபுரம் பகுதியில் தினசரி 500 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
பரிசோதனை செய்யப்பட்டவர்களின் இரத்தம்,சளி மாதிரிகளை கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு உறுதி
அதன் முடிவுகள் வந்தன. அதில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிசோதனையில் 23 பேர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த 27-ந் தேதி பிரபல தனியார் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் அப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக முடிவுகள் வெளிவந்த நிலையில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் கோரிக்கை
தனியார் பள்ளியில் முறையான சமூக இடைவெளி மற்றும் கைகளுக்கு கிருமிநாசினி பயன்படுத்தாததுதான் இதற்குக் காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அந்த பள்ளிக்கு உடனடியாக மாவட்ட சுகாதார துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்து பரவாமல் குடும்பத்தினரை 15 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய வகை உருமாறிய கொரோனா
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசான ஓமிக்ரான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தாராபுரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications