Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10க்கும் மேற்பட்ட ஆண்களுடன்.. அதிர வைத்த கவிதா.. 2019ல் ரத்தத்தை உறைய வைத்த கள்ளக் காதல் கொலை!

திருப்பூரில் கவிதா என்ற பெண் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒன்றாகும்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: எந்த வருடமும் இல்லாத அளவுக்கு கள்ள உறவு மூலம் இந்த வருடம் கொலைகள் அதிகரித்து காணப்பட்டது வேதனைக்குரிய விஷயமாகும்.. வெறும் கள்ளக்காதன் என்பது போய்.. கள்ளக்காதலர்கள் என்ற விகிதம் அதிகரித்ததும்.. அதன்மூலம் நடந்த வன்முறைகளும் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும். அந்த வகையில் நடந்ததுதான் கவிதாவின் கொலையும். "10-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பு இருந்தால், கொன்றுவிட்டேன்" என்று கணவனும், காதலனும் உள்ள நிலையில் கள்ளக்காதலன் ஒருவர் தந்த வாக்குமூலத்தை மறந்துவிட முடியாது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்தான் கவிதா. வயது 30.. கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.. ஆனால், கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு தனியாக பிரிந்து வந்தவர்.. குழந்தைகளையும் அவரிடமே விட்டுவிட்டு வந்தவர்.

4 வருஷமாக தூத்துக்குடியில் ஒரு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். அங்கேயே ஒரு லாரி ஷெட்டில் அக்கவுண்டன்ட்டாக வேலை பார்த்து வந்தார். அப்போதுதான் எட்வின் என்பவர் பழக்கமானார். காதலும் வளர்ந்தது.. போன வருஷம் கல்யாணமும் செய்து கொண்டனர்.

கருகிய நிலை

கருகிய நிலை

இந்நிலையில், கடந்த நவம்பர் முதல் வாரத்தில், கவிதாவை காணோம். அதனால் அவரை எட்வின் தேடி வந்தார். அப்போதுதான், உடல் கருகிய நிலையில் கவிதா விவேகானந்தா நகரில் உள்ள ஒரு வீட்டில் சடலமாக கிடந்தார் என்று தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடி விசாரணை மேற்கொண்டனர். கவிதாவின் கை, கால்களில் ரத்த காயங்கள் இருந்தன.. அடையாளமே தெரியாத வகையில் உடல் எரிந்து போய் இருந்தது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

"கவிதா வேலை பார்த்த இடத்தில் நிறைய ஆண் நண்பர்களுடன் நெருக்கமான நட்பை வைத்திருந்தார். எல்லாரிடமும் தனது செல்போன் நம்பரையும் தந்து வைத்தார். இப்படிதான் நான் பழக்கமானேன். ஆனால் இந்த விஷயம் எட்வினுக்கு தெரிந்து கவிதாவை அடித்து உதைத்தார். நவம்பர் 8ந்தேதி நைட் எட்விட் வேலைக்கு போய்விட்ட பிறகு, எனக்கு போன் பண்ணி கவிதா வர சொன்னார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

"கவிதா வேலை பார்த்த இடத்தில் நிறைய ஆண் நண்பர்களுடன் நெருக்கமான நட்பை வைத்திருந்தார். எல்லாரிடமும் தனது செல்போன் நம்பரையும் தந்து வைத்தார். இப்படிதான் நான் பழக்கமானேன். ஆனால் இந்த விஷயம் எட்வினுக்கு தெரிந்து கவிதாவை அடித்து உதைத்தார். நவம்பர் 8ந்தேதி நைட் எட்விட் வேலைக்கு போய்விட்ட பிறகு, எனக்கு போன் பண்ணி கவிதா வர சொன்னார்.

தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம்

எட்வினிடம் இருந்து என்னை காப்பாற்றும்படி சொல்லவும், நான் விவேகானந்தா நகரில் ஒரு வீடு எடுத்து கவிதாவை குடிவைத்தேன். அங்குதான் 2 பேரும் தங்கினோம். 10 ந்தேதி நைட் 2 பேரும் தனியாக இருந்தோம். அப்போ, கவிதாவுக்கு செல்போன் வந்து கொண்டே இருந்தது. முதலில் நான் எதுவும் கேட்டுக்கல.. தொடர்ச்சியாக வந்த 5 போன்களை எடுத்து பேசினார்.. எல்லாரிடமும் சிரித்து சிரித்து பேசினார். யார் என்று கேட்டதற்கு, ஒவ்வொருவரையும், அண்ணன், தம்பி, சித்தப்பா, என்று புதுசு புதுசாக உறவு முறை சொன்னார்.

விறகுக்கட்டை

விறகுக்கட்டை

இதற்கு அப்பறமும் ஒரு போன் வந்தது, அதில்தான் ரொம்ப நேரம் பேசிக் கொண்டே இருந்தார். சாதாரணமாக பேசாமல் மெல்லிய குரலில் பேசவும் எனக்கு கோபம் வந்துவிட்டது. அதனால் கீழே கிடந்த விறகுக்கட்டையை எடுத்து தலையில் அடித்துவிட்டேன். உடனே அக்கம்பக்கத்தினரிடம் சென்று இதை சொல்ல கதவை திறக்க முயன்றார். நான் அப்போது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன். மண்ணெண்ணையை மேல ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டேன்" என்றார்.

கைது

கைது

10-க்கும் மேற்பட்ட ஆண் நண்பர்கள் கவிதாவுக்கு உண்டாம்.. அவர்களிடம்தான் எந்நேரமும் பேசிக் கொண்டே இருப்பாராம்.. புருஷன், காதலன் எட்வின், கள்ளக்காதலன் கருப்பசாமி தவிர, மீதமுள்ள அந்த 10 பேர் யார் என்று தெரியவில்லை.. இது சம்பந்தமான விசாரணை நடந்தாலும்... தவறான உறவில் ஒரு பெண் சிக்கிக் கொண்டால் விளைவு மிக மோசமாக இருக்கும் என்பதற்கு உதாரணம்தான் கவிதாவின் மரணம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+