திருப்பூரில் குடிபோதை ஓட்டுநரால் விபரீதம்.. 2 கார்கள் மீது லாரி மோதி விபத்து .. 3 பேர் மரணம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பாளையத்தில் அடுத்தடுத்த இரண்டு கார்கள் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியதில் 7 வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
குடிபோதையில் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி லாரியை ஒட்யடி ஓட்டுநரால் இந்த கோரவிபத்து நடந்திருப்பதும் ஒரு குடும்பமே பலியாகி இருப்பது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
இந்த கோரக்காட்சிகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரால் ஏற்படும் வலிகளை பிரதிபலிக்கிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த விபத்து சோகமான உதாரணம்.

நிலைதடுமாறியது
திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை கதிரவன் என்பவர் ஒட்டிக்கொண்டு சென்றார். கதிரவன் பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் அருகே லாரியில் சென்று கொண்டிருந்த போது, நிலைதடுமாறி எதிரே வந்த அடுத்தடுத்த இரண்டு கார்கள் மீது பயங்கரமாக மோதினார்.

3 பேர் பலி
இந்த விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. ஒரு காரில் பயணம் செய்த கார்த்திகேயன் அவரது மனைவி சரண்யா மற்றும் அவர்களது 7 வயது மகள் தனிகா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மற்றொரு காரில் இருந்த 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

லாரியின் அடியில் கார்
லாரியின் அடியில் சிக்கிய காரை கிரேன் உதவியுடன் உடைத்து மீட்ட தீயணைப்பு துறையினர் காரில் சிக்கியிருந்த கார்த்திகேயன் உடலை மீட்டனர். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்கு காரணம்
லாரியை ஓட்டிவந்த கதிரவன் குடிபோதையில் இருந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்தனர். குடிபோதையில் லாரி ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications