Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 பேர் நசுங்கி பலி.. திருப்பூர் அருகே கார்-லாரி மோதல்.. கோவில் சென்று திரும்பியபோது ஷாக் விபத்து

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காரும், டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 2 தம்பதி உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் பழனி கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மணக்கடவு எனும் இடம் உள்ளது. இந்நிலையில் தான் இன்று மாலையில் மணக்கடவு அருகே காரும், டேங்கர் லாரியும் சென்று கொண்டிருந்தது.

5 people from the same family died in a road accident near Dharapuram in Tiruppur district

திடீரென்று இந்த 2 வாகனங்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. ஒரே சாலையில் காரும், டேங்கர் லாரியும் எதிரெதிரே வந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனால் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

காரில் பயணித்தவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று காரில் பயணித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிவந்தது.

மேலும் படுகாயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இன்னொருவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

5 people from the same family died in a road accident near Dharapuram in Tiruppur district

இதையடுத்த சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையின்போது காரில் பயணித்தவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து சொந்த ஊர் திரும்பியபோது டேங்கர் லாரியுடன் மோதி விபத்தில் சிக்கி 5 பேர் பலியானது தெரியவந்தது.

அதோடு இறந்தவர்களில் 3 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் என்பதும் தெரியவந்தது.
அதாவது காரில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 65), அவரது மனைவி செல்வி (50), கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வஞ்சியம்மா நகரை சேர்ந்த தமிழ்மணி (50), அவரது மனைவி சித்ரா (45) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். மேலும் திண்டுக்கல்லை சேர்ந்த கலாராணி (55)என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது தெரியவந்தது.

இறந்தவர்களின் உடல் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+