செல்போனில் ‘100’ போட்டோ! தோழிகளை ‘அந்த’ வேலைக்கு அழைத்த குயின் ‘ஸ்வேதா’! திடுக்கிட்ட திருப்பூர்..!
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஆண் நண்பர்களுடன் தவறாக பழகியதோடு தனது சக தோழிகளின் புகைப்படங்கள் மற்றும் செல்போன் எண்களை கொடுத்து தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி மாணவி குறித்த சம்பவம் திருப்பூரில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 2 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் அவர்களை விபச்சாரத்திற்கு அழைத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் செய்துள்ளனர். இதையடுத்து விசாரணையில் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக உடன் படிக்கும் தோழிகளை விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதிக்க திட்டமிட்டது தெரியவந்தது.

திருப்பூரில் அதிர்ச்சி
குயின் ஸ்வேதா என்ற பொய்யான பெயரில் இஸ்டாகிராம் பக்கத்தில் உலாவி வந்த அந்த மாணவிக்கு பல ஆண் நண்பர்கள் உள்ளனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஆண் நண்பர்களுடன் தவறாக பழகியதோடு கல்லூரியில் பல மாணவர்களை தனது வலையில் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் தான் தனது ஆண் நண்பர்களுக்கு அந்த மாணவி தனது தோழிகள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சில் வைக்கும் புகைப்படங்களையும் செல்போன் நம்பரையும் அனுப்பியுள்ளார்.

ஆண் நண்பர்கள்
இதன் மூலம் மாணவிகள் 2 பேரை அந்த ஆண் நண்பர்கள் விபச்சாரத்திற்கு அழைத்துள்ளதுடன் விலையும் பேசியுள்ளனர். இதற்காக ஆண் நண்பர்களிடம் முன்கூட்டியே பணமும் பெற்றுள்ளார் அந்த மாணவி. இது குறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவிக்கு விபச்சார கும்பலுடன் தொடர்பு இருக்கிறது என்பது தெரிய வந்தது. அந்த மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆடம்பர வாழ்வுக்கு ஆசை
கல்லூரியில் படிக்கும் அந்த மாணவி ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசமான வாழ்க்கையும் வேண்டும் என்பதற்காக ஆண் நண்பர்களுடன் பழகியதோடு அவர்கள் மூலமாக விபச்சார கும்பலுடன் தொடர்பு வைத்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் மேலும் பணம் தேவைப்படும் என்பதால் சக மாணவிகளையும் அந்த பாதாளக் குழியில் தள்ளி பணம் பறிக்க திட்டமிட்ட அந்த மாணவி தனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் இருக்கும் போட்டோக்களை டவுன்லோட் செய்து அவர்களுடன் சகஜமாக பேசியுள்ளார்.

போலீசார் அதிர்ச்சி
பின்னர் அவர்களை செல்போன் எண்ணை வாங்கி விபச்சார கும்பலுக்கும் தனது ஆண் நண்பர்களுக்கும் அனுப்பியது தெரியவந்தது. இதனால் அதிர்ந்து போன போலீசார் அந்த மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களின் புகைப்படங்கள் இருந்துள்ளன. அவற்றில் சில ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் தோழிகளாகவே இருந்தாலும் கல்லூரி பெண்கள் மிக கவனமுடன் பழக வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications