"விலங்கு" சீரிஸ் பாணியில்.. கதை சொல்ல சொல்ல உடல் நடுக்கம்.. திருப்பூரில் போலீஸை அலற விட்ட ஒற்றை ஆள்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் போலீசாரை வெங்கடேசன் என்ற வியாபாரி அலற விட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் விதை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் திருப்பூர் போலீஸ் அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய 50 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போய்விட்டது என்று கூறி உள்ளார். கொஞ்சம் அழுத்தி கேட்டதற்கு தன்னுடைய பணம் திருடப்பட்டது என்று கேட்டுள்ளார். இதை அடுத்து போலீசார் விளக்கமாக விசாரித்து உள்ளனர்.

A man told a chilled and confused story to police officials about his missing 50 Lakhs rupees in Thiruppur

அதன்படி முதல் விசாரணையில் நான் பணத்தை எடுத்துகொண்டு காரில் சென்றேன். பையில் 50 லட்சம் இருந்தது. காரில் சென்றேன்.; என்னை வந்து சிலர் மறித்தனர். என்னை மறித்தவர்கள் என்னை தாக்கிவிட்டு பணத்தை திருடிக்கொண்டு சென்றனர் என்று கூறியுள்ளார். மேற்கொண்டு விசாரித்ததில் என்னிடம் பணம் பறித்தவர்கள் போலீஸ் உடை அணிந்து இருந்தனர் என்று கூறி உள்ளார். போலீஸ்தான் வந்து தன்னை மிரட்டியதாக கூறியுள்ளார். இதனால் போலீசார் அதை பற்றி தீர்க்கமாக விசாரித்துள்ளனர்.

இதை தொடர்ந்து மேலும் விசாரணையில் மாற்றி பேசிய அந்த நபர்.. போலீஸ் என்னிடம் கொள்ளையடிக்கவில்லை. போலீஸ் சட்டை போட்டுகொண்டு வந்து கொள்ளையடித்தனர். நான் வைத்து இருந்த நோட்டை சோதனை செய்தனர். அதை கள்ள நோட்டு என்று கூறினர். அதனால் என்னிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வதாக கூறினார். இதனால் உடனே போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். போலீஸ் நிலையம் வாருங்கள் என்று கூறிவிட்டு சென்றனர். அதனால் போலீஸ் நிலையத்திற்கு வந்தேன் என்று கூறி உள்ளார் .

A man told a chilled and confused story to police officials about his missing 50 Lakhs rupees in Thiruppur

இப்படி விசாரணையில் அந்த நபர் மாறி மாறி பேசி உள்ளார். முதலில் தன்னிடம் பணம் காணாமல் போய்விட்டது. அதை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அடுத்து நடந்த மேல் விசாரணையில்.. பணத்தை சிலர் கொள்ளையடித்துவிட்டதாக கூறி உள்ளார். அதன்பின் போலீசார்தான் கொள்ளையடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

அதன்பின் மேற்கண்ட விசாரணையில் போலீசார் கெட்டப்பில் சிலர் வந்து பணத்தை கள்ள நோட்டு என்று கூறி பணத்தை பறிமுதல் செய்தனர் என்று கூறி உள்ளார். இவர் இப்படி மாறி மாறி பேசியதால் போலீசார் குழம்பி உள்ளார். அதன்படி விலங்கு என்ற சீரியஸ் சமீபத்தில் வந்தது. அந்த சீரியஸில்.. கொலைகாரர் முதலில் ஒரு விஷயம் சொல்ல.. அதன்பின் மீண்டும் மீண்டும் பல விஷயங்களை சொல்ல.. கடைசியில் மாற்றி மாற்றி பேசி.. ஒரு வழியாக பல கொலைகளை செய்ததை ஒப்புக்கொள்வார்.

A man told a chilled and confused story to police officials about his missing 50 Lakhs rupees in Thiruppur

அந்த சீரியஸ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதை போலவே அந்த விதை விற்பனையாளரும் இதேபோல் மாற்றி மாற்றி பேசி உள்ளார். அவரின் போன் நம்பரை வைத்து தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர் உண்மையில் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் உண்மையில் பணம் கொண்டு சென்றாரா? அதை உண்மையில் திருடிவிட்டனரா? போலீஸ் கெட்டப்பில் ஆட்கள் வந்தது உண்மையா"? இல்லை இவர் பணத்தை கொண்டு செல்லாமல்.. நிவாரணம், பெறுவதற்காக இப்படி நடிக்கிறாரா? இவரே ஆள் வைத்து பணத்தை திருடி நிவாரணம் பெற முயற்சி செய்கிறாரா என்று போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+