திருப்பூர் நகரின் பிரதான பகுதியில் உல்லாசம்.. வெட்ட வெளியில் விபச்சாரம்? ஆடிப்போக வைத்த சிசிடிவி காட்சிகள்
திருப்பூர்: திருப்பூர் மாநகரம் பனியன் தொழில் காரணமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாக இருக்கிறது. நகரின் மத்திய பிரதான பகுதியான கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் விபச்சார தொழில் செய்யும் கும்பல் காசு பறிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இது பற்றி போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. பல லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். பல மாநிலத்தவர் வாழும் ஊராக இருக்கிறது. திருப்பூருக்கு தினமும் பலர் வேலை தேடி வருகிறார்கள். இந்நிலையில் சட்டவிரோத சம்பங்களையும் சிலர் மேற்கொள்கிறார்கள். முகம் சுளிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

திருப்பூரின் காமாட்சி அம்மன் கோவில் வீதி பகுதிகளில் உள்ள கடை வாசல்களிலும் அங்குள்ள சந்துகளிலும் விபச்சார பெண்கள் கலைஞர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் ஆண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுவதும், பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகவே உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடை வாசலில் சில பெண்கள், ஆண்களை அழைத்து வந்து விபச்சாரம் செய்வதும், மது அருந்திவிட்டு அவர்களுடன் வெட்ட வெளியிலேயே உல்லாசமாக முத்தமிடுவது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. மேலும் காமாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள மறைவான சந்து பகுதிக்கு அழைத்துச் செல்லும் செயல்களில் ஈடுபடுவதுமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பகுதியில் சுற்றி தெரியும் விபச்சார கும்பலையும் காசு பறிக்கும் கும்பல்களையும் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், காமாட்சி அம்மன் கோவில் வீதி எம் ஜி புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அந்த பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
முன்னதாக திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த லட்சுமிநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடந்ததாக இந்த மாத தொடக்கத்தில் ஒருவழக்கு பதிவாகி உள்ளது. அப்போது விபச்சாரம் பற்றி அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கேரிபாளையம் செல்வலட்சுமிநகரை சேர்ந்த ஆயிஷா என்ற லாவண்யா (வயது 39) என்பவர் இளம்பெண் ஒருவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாவண்யாவை கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி ஆகஸ்ட் முதல் வாரத்தில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications