தாராபுரம் சத்யாவின் அந்தரங்கம்.. திகைத்த திருப்பூர் போலீஸ்.. ஆன்லைனில் வரிசையா வந்த ஆண்கள்
திருப்பூர்: தாராபுரம் சத்யா நேற்றைய தினம் கைதாகியிருக்கும் நிலையில், அவரை பற்றின மேலும் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பிவிட்டு வருகிறது.
கொடிமுடியை சேர்ந்த, 30 வயதான சத்யா என்ற பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.. ஒரு பெண் குழந்தையும் உள்ளது.. ஆனாலும், திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து, அவர்களை திருமணம் செய்து ஏமாற்றி பணம், நகை மோசடிகளை செய்திருக்கிறார்.

பேக்கரி ஓனர்: இதில் கடைசியாக சிக்கியவர் தாராபுரத்தை சேர்ந்த 30 வயது பேக்கரி ஓனர்.. திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனியில் தனது தகவல்களை பதிவிட்டு இருந்தநிலையில்தான் அதே மேட்ரிமோனியில் சத்யாவின் அறிமுகம் கிடைத்திருக்கிறது... தனக்கு கல்யாணமானதை மறைத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, பேக்கரி ஓனரை சத்யா திருமணம் செய்துள்ளார்.
சத்யா பெயரை ரேஷன் கார்டில் பதிவதற்காக முனைந்தபோதுதான், கணவர் என்று ஏற்கனவே ஒருவரது பெயர் பதிவாகியிருந்ததை கண்டு பேக்கரி ஓனர் நிலைகுலைந்து போனார். இதனால் சந்தேகமடைந்த பேக்கரி ஓனர் சத்யா குறித்து கொடிமுடிக்கே நேரடியாக சென்று விசாரித்தபோதுதான், அவர் ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறித்து வந்தது தெரியவந்தது.
தற்கொலை: இந்த சம்பவத்தால் மனமுடைந்த பேக்கரி ஓனரின் தாத்தா, தற்கொலையே செய்து கொண்டாராம்.. இதற்கு பிறகே சத்யா குறித்து தாராபுரம் மகளிர் போலீசில் புகார் தரப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த சத்யாவை போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே, திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டிஎஸ்.பி, சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத இளைஞர்கள், தொழிலதிபர்கள் , அரசியல்வாதிகள், ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் என 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், லட்சக்கணக்கில் இவர்களிடம் நகை, பணத்தை சத்யா பறித்ததாகவும் கூறப்படுகிறது.
தோழி வீடு: எனவே, சத்யாவை கைது செய்து விசாரித்தால்தான் உண்மை தெரியவரும் என்பதால், தனிப்படை அமைத்து, சத்யாவை போலீசார் தேடி வந்தனர்.. சத்யாவின் செல்போன் சிக்னலை வைத்து, தோழி வீட்டில் பதுங்கியிருந்த சத்யாவை நேற்றைய தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரத்துக்கு சத்யாவை அழைத்து வந்து, அரசு மருத்துவமனையில் சத்யாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.. பிறகு பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் சத்யாவை கோவை மகளிர் சிறையில் அடைத்தனர்.
உல்லாசம்: முன்னதாக, சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்திருக்கிறதாம்.. அதாவது, மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள செல்போன் நம்பர் மூலம் தன்னை தொடர்பு கொள்ளும் ஆண்களை, சத்யா தனிமையில் சந்தித்து பேசுவாராம்.. அப்போது தன்னுடைய அழகில் அவர்களை மயக்கி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கும்போது, சத்யா அதனை ரகசிய கேமரா மூலமும் வீடியோ எடுத்து வைத்து கொள்வாராம். பிறகு அந்த ஆபாச வீடியோ வீடியோவை காண்பித்து, தன்னிடம் உல்லாசமாக இருந்த ஆண்களிடம் நகை-பணம் பறித்து விடுவாராம்..
ஆபாச வீடியோ: இதைத்தவிர, அடிக்கடி செலவுக்கு ரூ.10 ஆயிரம், 20ஆயிரம் என்று அவர்களிடமே கேட்டு வாங்கி வந்துள்ளார்.. ஆபாச வீடியோ சத்யாவிடம் உள்ளதால், இதற்கு பயந்துபோன பலரும், சத்யா கேட்கும் பணத்தை தந்து வந்திருக்கிறார்கள்.
அதேபோல, திருமணம் ஆன ஆண்களின் குடும்பத்தினரும், தங்கள் மானம் போய் விடும் என்று பயந்துகொண்டு, சத்யா கேட்டபோதெல்லாம் பணத்தை வாரி வழங்கியுள்ளனர்... ஒருசிலல்ர சொத்துக்களையும் எழுதி சத்யாவிடம் தந்திருக்கிறார்களாம்.. இதனால் சத்யாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிகிறது.
சத்யா: இப்போது சத்யா போலீஸ் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் ஆன்லைன் மூலம் தாராபுரம் போலீசில் புகார் கொடுத்து வருகிறார்கள்.. இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் சத்யா மீது புகார் தந்திருக்கிறார்கள்.. அத்துடன், சத்யா மீது நடவடிக்கை எடுப்பதுடன், தாங்கள் கொடுத்த நகை-பணத்தை மீட்டு தருமாறும் அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இப்போது போலீசார், சத்யாவிடம் விசாரணை நடத்தி, அவரிடமிருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன்களில் ஆபாச படங்கள் இருக்கிறதா என்றும் ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியிருக்கிறார்களாம்..
ஆதாரம்: நேற்றைய தினம் திருப்பூர் சிறைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, போலீசாரை பார்த்து சத்யா, "சார்.. என்கிட்ட இருக்கும் ஆதாரத்தையெல்லாம் காட்டுறேன்.. உங்களிடம் எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்.. ஆனால், தயவுசெய்து என்னுடைய குடும்பத்தை மட்டும் அசிங்கப்படுத்தாதீங்க" என்று அழுதுகொண்டே சொன்னார். அதற்கு போலீசார், அப்படியெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications