"ஹேய் எப்புட்றா".. காட்டுக்குள் கட்டிப்புரண்ட பெண்கள்.. யாரந்த காதலன்.. அதிர்ந்த மக்கள்.. இப்படியுமா
திருப்பூர்: ஒரு பெண்ணுக்காக, 2 ஆண்கள் அடித்து கொள்ளும் சம்பவத்தை கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால், ஒரு ஆணுக்காக 2 பெண்கள், அடித்து கொண்டுள்ளனர்.. அதுவும் இவர்கள் 2 பேருமே பள்ளி மாணவிகள் என்பது வேதனையை தந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது... இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை உள்ளது.
மொத்தம் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள்.. இந்நிலையில், நேற்று மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப்பகுதியில், அந்த பள்ளி மாணவிகள் ஒன்றாக திடீரென திரண்டனர்.

காட்டுப்பகுதி
30-க்கும் மேற்பட்ட மாணவிகள், காட்டுப்பகுதியில் ஒன்றாக திரண்டதுடன், ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கினர்.. ஒருவரை பார்த்து இன்னொருவர் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் திட்டிக் கொண்டார்கள்.. இந்த தடித்த வார்த்தைகள் தகராறாகவும் உருவெடுத்தது.. மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர்... பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. எதற்காக இவர்கள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள் என்றும் புரியாமல் விழித்தனர்..

ஆவேசம்
இதனால், அந்த பகுதி மக்கள், விரைந்து வந்து, மோதலை தடுத்து நிறுத்த முயன்றனர்.. ஆனாலும், ஆவேசமாக காணப்பட்ட மாணவிகளை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.. பிறகு, பொதுமக்களே பெரும் முயற்சிக்கு பிறகு அவர்களை அமைதிப்படுத்தினர்.. மாணவிகளிடம் மோதலுக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், இது ஒரு காதல் விவகாரம் என்பதே தெரியவந்தது.. அந்த பள்ளியில் படிக்கும் மாணவி, மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்... ஆனால், அந்த மாணவனுக்கு இன்னொரு மாணவி, வாட்ஸ் அப் மூலம் பல்வேறு மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்.. அதே மாணவனுடன் நிறைய நேரம் சாட்டிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

முற்றுப்புள்ளி
இந்த விஷயம் மாணவணை காதலிக்கும் அந்த பெண்ணுக்கு தெரிந்துவிட்டது.. அதனால், சகமாணவியிடம் இதை பற்றி கேட்டுள்ளார்.. தான் காதலிக்கும் மாணவனுடன் சாட்டிங்கில் எப்படி ஈடுபடலாம்? என்று தட்டிக்கேட்டுள்ளார்... இதுதான் இவர்களுக்குள் தகராறாக உருவெடுக்க காரணமாகி உள்ளது.. இதற்கு முன்புகூட, இது தொடர்பாக பெரிய சண்டை வந்துள்ளது.. அவர்களுக்குள் அடிக்கடி தகராறு வரை சென்றிருக்கிறது.. ஆனாலும், எந்த முடிவும் இந்த காதல் விவகாரத்தில் எட்டப்படவில்லை.. ஒரு மாணவனுக்காக 2 பெண்கள் அடித்துக் கொள்ளும் விவகாரம் இவர்களின் மற்ற தோழிகளுக்கும் தெரியுமாம். அதனால், இந்த விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சக தோழிகளை, இந்த 2 பெண்களும் கேட்டுக் கொண்டனர்.

குடுமிப்பிடி
அதற்காக, நேற்று சாயங்காலம் ஸ்கூல் முடிந்ததுமே, இந்த பிரச்சினை தொடர்பாக பேசி தீர்த்து கொள்வதற்காக 2 மாணவிகளும், தங்களுடன் படிக்கும் தோழிகளை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இரு தரப்பு மாணவிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சுமூக முடிவு ஏற்படாமல், 2 தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது... வாக்குவாதம் முற்றிப்போய், இரு தரப்பு மாணவிகளும் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டு கட்டிப்புரண்டுள்ளனர்..

ஹெச்.எம். ஷாக்
அதற்கு பிறகுதான் பொதுமக்கள் உடனே இதனை பார்த்து தடுத்து நிறுத்தியுள்ளனர்... பிறகு, இந்த சம்பவம் ஸ்கூல் வரை கொண்டு செல்லப்பட்டது.. பள்ளி தலைமையாசிரியர் இதை கேள்விப்பட்டு அதிர்ந்துபோனார்.. இரு தரப்பு மாணவிகளிடமும் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்.. காதலனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... காட்டுக்குள் 2 பெண்களும் கட்டிப்புரண்டு, உருண்டு சண்டை போடும் அளவுக்கு சென்றுள்ள நிலையில், அப்படிப்பட்ட காதலன், யார் என்றுதான் தெரியவில்லை..!!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications