திருப்பூர் வரதட்சணை கொடுமை.. பிரீத்தி தற்கொலை வழக்கில் கணவன், மாமியார், மாமனார் கைது.. போலீசார் அதிரடி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருமணமான 11 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் ரிதன்யா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து உயிரை மாய்த்த நிலையில் திருப்பூரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வரதட்சணை கொடுமையால் தான் தனது மகள் பிரீத்தி உயிரிழந்ததாக குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கணவர், மாமியாருடன் தகராறு?
திருப்பூர் கே செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் குப்புசாமி. இவரது மனைவி சுகந்தி. இவர்களது 26 வயது மகள் பிரீத்தி. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பிரீத்திக்கும் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயர் சதீஸ்வர் (30) என்பவருக்கும் திருமணம் ஆனது.
இந்த திருமணத்தின் போது வரதட்சணையாக பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பிரீத்தி கோபித்துக்கொண்டு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை செய்த பிரீத்தி
பெற்றோர் வீட்டுக்கு வந்த பிரீத்தி கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். பிரீத்தியின் பெற்றோர், சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்து இருக்கின்றனர்.
இந்த சொத்தில் பிரீத்தியின் பங்காக ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்த பணத்தை கணவர் சதீஸ்வர், தனக்கு கொடுக்குமாறு மனைவியிடம் தொடர்ந்து கேட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் பிரீத்தி மனம் உடைந்த நிலையில், இந்த முடிவை எடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து நல்லூர் போலீசார் விரைந்து சென்று பிரீத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர், மாமனார், மாமியார் கைது
இதற்கிடையே என் மகள் சாவுக்கு வரதட்சணை கொடுமை தான் காரணம் என்று கூறி பிரீத்தியின் குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம்சாட்டி புகார் அளித்தனர். மேலும் சத்தீஸ்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் பிரீத்தியின் உடலை வாங்குவோம் எனவும் உறவினர்கள், குடும்பத்தினர் போராட்டம் செய்தனர்.
இதையடுத்து நல்லூர் போலீசார் பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருப்பூரில் நள்ளிரவில் சுவர் ஏறி குதித்த 27 வயது காமுகன்.. 75 வயது மூதாட்டிக்கு ஏற்பட்ட நடுக்கம் -
திருப்பூர் செருப்புக்கடை ஊழியர் 28 வயதில் இப்படியொரு முடிவு.. பல்லடம் மேம்பாலத்தில் நடந்தது என்ன? -
திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications