“நாட்டை பத்திரமாக வைத்திருங்கள் அண்ணா..” திமுக மகளிர் மாநாட்டில் ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்ட கனிமொழி!
திருப்பூர்: "பாசிசத்துக்கு எதிராக முதலில் குரல் கொடுப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின்; உங்களிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறோம் என்பதற்காக அரசமைப்பு புத்தகம் பரிசளித்தோம். தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்த நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. நாட்டை பத்திரமாக வைத்திருங்கள் அண்ணா" என திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' எனும் மேற்கு மண்டல மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமை வகிக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் நீலகிரி, நாமக்கல், கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த 6 மாவட்டங்களில் உள்ள 12,380 பூத்துகளில் உள்ள சுமார் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் பேசிய கனிமொழி எம்.பி, "கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் கருப்பு சிவப்பால் கண்ணை குளிர்வித்த அனைவருக்கும் நன்றி. வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற மாநாட்டுக்கு என்ன காரணம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். பெண்களுக்கான ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சருக்கு நன்றி சொல்லக்கூடிய மாநாடு இது. மறுபடியும் இதே ஆட்சியை தரக்கூடிய முதலமைச்சர் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லக் கூடிய மாநாடு இது.
அரசமைப்புச் சட்ட புத்தகத்தை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினோம். மகளிர் ஆகிய நாங்கள் இந்த நாட்டை உங்களிடம் ஒப்படைக்கிறோம். நாட்டின் எதிர்காலத்தை உங்களிடம் ஒப்படைக்கிறோம். நாட்டை பாதுகாக்கும் அடையாளமாக புத்தகம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்த நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு முதல்-அமைச்சருக்கு உள்ளது.
இந்த ஆட்சியை மகளிருக்கான ஆட்சி என்று சொல்கிறோம். தேர்தர் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தீர்களே நிறைவேற்றினீர்களா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு 1.31 கோடி பெண்கள் பதில் சொல்வார்கள். 47% பெண்கள் வேலைக்குச் செல்ல காரணம் அடிப்படைக் கல்வி. பாதுகாப்பான மாநிலமாக இருக்கக்கூடிய காரணம் தான்.
தமிழ்நாட்டில் கல்வி, கல்வி வளர்ச்சி இல்லை என்கிறார்கள். உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 48%. இது வளர்ந்த நாடுகளுக்கு இணையான ஒரு சதவீதம். பாதுகாப்பான மாநிலம் என்பதால் அதிகமாக வேலைக்கு போகும் பெண்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
எதிரிலே இருக்கும் சங்கிக் கூட்டம், திமுக ஆட்சியைப் பார்த்து பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற கருத்தை சொல்லி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகம். பாஜக ஆட்சியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி வழக்கில் போராட்டத்துக்கு போக கூட விடவில்லை. அங்கு பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்ணுக்கு அத்தனை அச்சுறுத்தல்கள். நம்முடைய போராட்டத்திற்கு பிறகு தான் பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. திமுக ஆட்சியில் அந்த பெண்களுக்கு நியாயம் கிடைத்து இருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுமி குல்தீப் சிங் செங்கார் என்ற பாஜக முன்னாள் எம்எல்ஏவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் நாடு முழுவதும் பற்றி எரிந்த பிறகு அந்த பெண்ணுக்கு ஒரு நியாயம் கிடைத்தது. ஆனால் சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் அந்த குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து போராடக்கூடிய அந்த பெண்ணிற்கும், பெண்ணின் குடும்பத்திற்கும் எதிராக போலீஸ் களம் இறக்கப்படுகிறது. டெல்லியின் தெருக்களில் அவர்கள் எழுத்து வரப்படுகிறார்கள். பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்கக்கூடிய லட்சணம் இதுதான்
ஆனால் கோவையில் பெண்களுக்கு எதிராக ஒரு சம்பவம் நடந்தது. 30 நாட்களில் சார்ஜ் சீட் போட வேண்டும் என்று சொன்னது நம்முடைய முதல்வர். அதன்படி 30 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தகவல் செய்யப்பட்டது. இதுதான் திமுகவுக்கும், நம்மீது குற்றம் சொன்னால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்குமான வித்தியாசம்.” எனப் பேசியுள்ளார்.
-
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு












Click it and Unblock the Notifications