திருப்பூரில் மீன் வியாபாரத்திற்கு இடையூறு.. 15 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற கொடூர வீடியோ ஆதாரம்
Recommended Video
திருப்பூர்: திருப்பூரில் மீன் வியாபாரத்துக்கு இடையூறாக இருந்த 15 நாய்களை விஷம் வைத்து கொலை செய்த மீன் வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் வீதியை சேர்ந்தவர் கோபால். இவர் மீன் பிடித்து கடைகளுக்கு விற்று வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரங்களில் இவர் மீன்பிடித்து விட்டு தெருவில் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.
அப்போது அந்த தெருக்களில் உள்ள நாய்கள் இவரைப் பார்த்து குரைத்து வந்தது. ஒட்டுமொத்த நாய்களும் குரைத்ததால் ஆத்திரமடைந்த மீன் வியாபாரி கோபால் நாய்களை கொல்ல திட்டமிட்டிருந்தார்.

விஷம் கலந்து உணவு
இதையடுத்து மீனில் விஷம் கலந்து தெருநாய்களுக்கு உணவாக கொடுத்துள்ளார். இதில் விஷம் கலந்த மீனை உட்கொண்ட தெரு நாய்கள், சிறிது நேரத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இப்படி இரண்டு நாட்களில் 15 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றது யார் என்று தெரியாமல் மக்கள் தவித்து வந்தனர். இதையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர்.

கோபால் மீது நடவடிக்கை கோரிய மக்கள்
அதில் மீனவர்தான் நாய்களை கொன்றுள்ளார் என்ற தகவல் தெரியவந்தது.. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள், நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற மீன் வியாபாரி கோபால் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு சென்றனர்.

பரபரப்பு
அப்போது அங்கு போலீஸாரிடம் மனு அளித்தனர். போலீஸாரும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து 15 நாய்களை விஷம் வைத்து கொன்ற மீன் வியாபாரி கோபாலை கைது செய்தனர்.

அவ்வப்போது
நாய்கள் குரைத்தது என்ற ஒரே காரணத்துக்காக நன்றியுள்ள வாயில்லா ஜீவன்களான நாய்களை கொன்ற கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று குட்டி நாய் ஒன்றை ஒருவர் அடித்தே கொன்றதை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications